சென்னை: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் தங்கத்தின் விலை தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
சென்னையில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமுமாக இருந்து வருகிறது. அதேபோல், ஜூலை 22ஆம் தேதி 120 ரூபாய் அளவிற்கு குறைந்து இருந்தது. இந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 440 ரூபாய் குறைந்தது. பின்னர், ஜூலை 23ஆம் தேதி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 44,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த மாதத் தொடக்கத்தில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. ஆகஸ்ட் 1ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 44,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2ஆம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 44,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆகஸ்ட் 7ஆம் தேதி ஒரு சவரன் ரூ.44,440க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு ஆகஸ்ட் 8ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.44,320க்கு விற்கப்பட்டது. 9ம் தேதி சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ. 44,240க்கு விற்கப்பட்டது.
கடந்த மே மாதம் தொடக்கத்தில் தங்கத்தின் விலை அதிகபட்சமாக, ரூ.40 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. அமெரிக்காவில் நிலவிய பொருளாதார சூழல், தொடர்ந்து திவாலான வங்கிகள் என பல்வேறு காரணங்களால், உலக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக முதலீடு செய்யத் தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து, தங்கத்தின் விலையானது ஏழைக்கு எட்டாக் கனியாக மாறியிருந்தது. தற்போது தங்கத்தின் விலையானது இறங்குமுகமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட்19ஆம் தேதி) கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,450-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.43,600-க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து ரூ.76.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.200 குறைந்து ரூ.76,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், தொடர்ந்து சர்வதேச பொருளாதார சூழலின் மத்தியில் இரண்டு வாரங்களாகத் தங்கம் விலை அதிகரித்து, தற்போது தங்கத்தின் விலை சர்வதேச கமாடிட்டி மார்க்கெட்டை பொறுத்து உள்ளது. இது வரவிருக்கும் நாள்களிலும் தொடருமா? இல்லை மீண்டும் தங்கத்தின் விலை உயருமா? என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: இது ராகுல் ரைடு.. லடாக் பயணத்தில் ஒரு ரிலாக்ஸ் ட்ரிப்!