சென்னையை சேர்ந்த ஆசிரியரான சாந்தகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ஆங்கில நாளிதழ் ஒன்றில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பணியாற்றிய சுமார் 1லட்சம் அரசு ஊழியர்கள் தபால் வாக்கு அளிக்கவில்லை என்று செய்தி வெளியாகி இருந்தது. தேர்தல் ஆணையம் பராபட்சமின்றி விடுப்பட்டவர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மூலம் மறு விண்ணப்படிவம் வழங்கி அந்த ஓட்டுகளை வாக்கு எண்ணிக்கையின் போது சேர்க்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒவ்வொரு வாக்காளனின் வாக்கு முக்கியம். அதை அலட்சியப்படுத்த கூடாது. தேர்தலில் தபால் வாக்களிக்க விநியோகிக்கப்பட்ட விண்ணப்பங்கள் எத்தனை..? அதில் எத்தனை வாக்குகள் பதிவானது என்பது தொடர்பான விவரங்களை நாளை மறுநாள் தேர்தல் ஆணையம் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.