ETV Bharat / state

காவல் துறையின் எண்கள் 100, 112 வழக்கம்போல் செயல்படும் - tn police number change

சென்னை: தமிழ்நாட்டில் அவசர தேவைகளுக்காக அழைக்கும் காவல் துறையின் எண்கள் 100, 112 வழக்கம்போல் செயல்படும் எனத் தமிழ்நாடு காவல் துறை அறிவித்துள்ளது.

police-numbers-100-112-will-work-as-usual

author img

By

Published : May 23, 2020, 3:00 PM IST

தமிழ்நாட்டில் பொதுமக்கள் அவசரத் தேவைகளுக்காக காவல் துறையைத் தொடர்புகொள்ள 100, 112 ஆகிய எண்களைப் பயன்படுத்திவருகின்றனர்.

இந்தச் சூழலில், நேற்று பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தமிழ்நாடு காவல் துறையின் அவசர அழைப்பு எண்கள் 100, 112-க்குப் பதிலாக மாற்று எண்கள் தற்காலிகமாக வழங்கப்பட்டன. அதனால் நேற்று முழுவதும் மாற்று எண்கள் செயல்பாட்டிலிருந்தன.

அதைத்தொடர்ந்து இன்று தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டுவிட்டதால், எப்போதும் போலவே 100, 112 ஆகிய எண்களைப் பொதுமக்கள் பயன்படுத்தலாம் எனக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனவே பொதுமக்கள் அவசரத் தேவைகளுக்காக காவல் துறையை அழைக்க 100, 112 எண்கள் தொடர்ந்து செயல்பாட்டிலிருக்கும்.

இதையும் படிங்க: காவல்துறை அவரச அழைப்பு எண்கள் தற்காலிகமாக மாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.