திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வர்த்தக மையத்தில் வரும் 13, 14, 15 ஆகிய தினங்களில் பிரியாணி திருவிழா நடத்துவதாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வா அறிவித்தார்.
இந்நிலையில் அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று நாளை நடக்கவிருந்த பிரியாணி திருவிழாவில் இடம் பெறும் 50 வகை பிரியாணிகளில் மாட்டிறைச்சி பிரியாணி மட்டும் இடம்பெறாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் பிரியாணி திருவிழாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
எதிர்ப்பு எழுந்ததையடுத்து கனமழையின் காரணமாக, பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
இந்நிலையில் இந்நிகழ்வு குறித்து கவிஞர் சுகிர்தராணி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் , 'ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீஃப் பிரியாணி தவிர்க்கப்பட்டிருப்பது தீண்டாமையின் ஒரு வடிவம் தான். எனவே, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக கடந்த மாதம் திருப்பத்தூர் புத்தகத் திருவிழாவில் மாவட்ட ஆட்சியரிடம் பெற்ற நினைவுப் பரிசையும் போக்குவரத்திற்காக கொடுத்த ரூபாய் ஐந்தாயிரத்தையும் மாவட்ட ஆட்சியரிடம் திரும்ப அளிக்கிறேன்’ எனப் பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க : பிரியாணி திருவிழா ஒத்திவைப்பு: மழைதான் காரணமாம்..