ETV Bharat / state

2 கொலை வழக்கில் தொடர்புடையவர் வெட்டிக் கொலை! - death by unidentified persons!

சென்னை: இரண்டு கொலை வழக்குகளில் தொடர்புடைய நபர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு குப்பைக் கிடங்கில் வீசப்பட்டுள்ளார்.

 The person involved in the murder case was hacked to death by unidentified persons!

author img

By

Published : Aug 11, 2020, 3:34 PM IST

சென்னை மீனம்பாக்கம் அடுத்த பழவந்தாங்கல் பக்தவத்சலம் நகர் ஒன்றாவது தெருவில் வசித்து வருபவர்கள் சத்தியநாதன்- எழிலரசி தம்பதி. இவர்களது முதல் மகனான ராஜேஷ் பல்வேறு சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுவந்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இவர் பொழிச்சலூர் பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டார். பின்னர் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

இந்நிலையில், பழவந்தாங்கல் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காலி மைதானத்தில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டி வருகின்றனர். அதே இடத்தில் அப்பகுதியை சேர்ந்த சிலர் மது அருந்திவருவது வழக்கம். நேற்று இரவு எழிலரசியின் மற்றொரு மகனான பிரபாகரனும் அந்த பகுதிக்கு மது அருந்த சென்றுள்ளார்.

இரவு முழுவதும் பிரபாகரன் வீட்டிற்கு வராததால் அவரை அப்பகுதி முழுவதும் உறவினர்கள் தேடியுள்ளனர். இதற்கிடையில், இன்று காலை அப்பகுதிக்கு குப்பை கொட்டச் சென்ற நபர் ஒருவர் பிரபாகரன் வெட்டப்பட்டு உயிரிழந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவரின் தாயிடம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பழவந்தாங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. காவலர்கள் இவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் என்ன, அவரை கொலை செய்தது யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், பிரபாகரன் மீது இரண்டு கொலை வழக்குகள் மற்றும் நகைப் பறிப்பு வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. இவர் மீது கொலை வழக்குகள் இருப்பதால் முன்விரோதம் காரணமாக யாராவது கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.