சென்னை: சென்னையின் பல்லாவரம் அடுத்த பம்மல் பிரதான சாலையில், ஸ்ரீ கணேஷ் சவுண்ட் சர்வீஸ் நிறுவனம் இயங்கிவருகிறது. இங்கு மேலாளராக பணிபுரிபவர் ஜெயமோகன்(63). இவர், தான் பணிபுரியும் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு வாகனத்தை, பம்மல் சம்மந்தனார் தெருவில் நிறுத்தி வைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி காலை வழக்கம்போல, ஜெயமோகன் வாகனத்தை எடுக்க சென்றிருக்கிறார். அப்போது வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த, சுமார் 40 கிலோ மின் ஆக்கியின் செப்பு கம்பி காணாமல் போனதைக் கண்டு ஜெயமோகன் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சங்கர் நகர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் பம்மல் கிருஷ்ணா நகரை சேர்ந்த சந்திரன் என்பவர் (29), மதுவாங்குவதற்காக செப்பு கம்பியை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து அவரைக் கைது செய்த காவல் துறையினர், தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்!