ETV Bharat / state

'வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக பின்னடைவை சந்திக்கும்'- ஜெயக்குமார்

2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு பெரிய பின்னடைவு ஏற்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு பெரிய அளவில் பின்னடைவு ஏற்படும் - ஜெயக்குமார்

author img

By

Published : Jun 5, 2022, 6:26 AM IST

சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின், மாநில, மாவட்ட, தொழிற்சங்க நிர்வாகிகள் 120 பேர் அண்ணா தொழிற் சங்கப் பேரவையில் தங்களை இணைத்து கொண்டனர்.

இதனையடுத்து, கட்சியில் இணைந்த மாற்று கட்சியினருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. அவர்கள் அனைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களுடன் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் எம்.பி ஜெயவர்தன், ஆலங்குளம் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ உள்ளிட்ட அதிமுகவைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அம்முக வை சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகிகள் 120 பேர் அண்ணா தொழிற் சங்கப் பேரவையில் தங்களை இணைத்து கொண்டனர்
அமமுக வை சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகிகள் 120 பேர் அண்ணா தொழிற் சங்கப் பேரவையில் தங்களை இணைத்து கொண்டனர்

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "திமுக அரசு தொழிலாளர்கள் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்கவில்லை. திமுக அரசு விளம்பர அரசியலை செய்து, தொழிலாளர்களை வஞ்சிக்கின்ற அரசாக இருக்கிறது. கொலை, கொள்ளை, கஞ்சா, போதை, கூட்டு பாலியலில் ஆகியவற்றில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக வாழமுடியாத சூழல் உள்ளது‌. திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு குளிர்விட்டு போய்விட்டது. தொடர்ந்து பொய் வழக்கு போட்டு அதிமுகவினரை கைது செய்யும் வேளைகளைதான் திமுக செய்துவருகிறது. குற்றங்களை கட்டுப்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் தலையீடு இருப்பதால் காவல்துறை முறையாக விசாரணை நடத்த முடியவில்லை.

ஜெயக்குமார் பேட்டி

திமுக ஆட்சியில் நடக்கும் குற்றங்களை கண்டித்து, அதிமுக சார்பில் போராட்டம் நடத்துவது தொடர்பாக தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும். அதேபோல் மக்கள் தான் இறுதி எஜமானர்கள். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு பெரிய அளவில் பின்னடைவு ஏற்படும். 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று உறுதியாக அதிமுக ஆட்சியைப் பிடிக்கும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: காங்கிரஸிற்கு டாட்டா. பாஜகவில் நக்மா? பரபரப்பு தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.