ETV Bharat / state

சென்னை மாநகராட்சிப்பள்ளிகளின் பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது... மா.சுப்பிரமணியன் - Annual scholarship for higher education students

சென்னை மாநகராட்சிப்பள்ளிகளின் பொதுத்தேர்வு விகிதம் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டிய தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கல்வித்துறை இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை மாநகராட்சி பள்ளிகளின் பொது தேர்வு தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது...மா சுப்பிரமணியன்

author img

By

Published : Aug 16, 2022, 7:49 PM IST

சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் மாநகராட்சிப் பள்ளிகளில் 2021 - 2022ஆம் கல்வியாண்டில் பயின்று உயர் கல்வியில் சேர்ந்துள்ள 285 மாணவ மாணவியர்களுக்கு 67.39 லட்சம் ரூபாய் கல்வி ஊக்கதொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினர்.

முதலில் பேசிய ஆணையர் ககன்தீப் சிங் பேடி, பெருநகர சென்னை மாநகராட்சியின் கல்வித்துறையின்கீழ் 281 சென்னைப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 38 சென்னை உயர்நிலைப்பள்ளிகளும், 32 சென்னை மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. சென்னைப்பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டுதோறும் மாநகராட்சி நிதியிலிருந்து ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில், 2021 - 2022ஆம் கல்வி ஆண்டில், மாநகராட்சிப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் 425 மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ.90.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவம் பயிலும் 2 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.45,000 வீதம் ரூ.90 ஆயிரமும், பொறியியல் பயிலும் 120 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.45,000 வீதம் ரூ.54 லட்சமும், பட்டப்படிப்பு பயிலும் 129 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.7000 வீதம் ரூ.9.03 இலட்சமும், ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பயிற்சி பயிலும் 4 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.40 ஆயிரமும், டிப்ளமோ பயிலும் 23 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.7000 வீதம் ரூ.161 லட்சமும், சட்டம் பயிலும் 2 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.20 ஆயிரமும், ஒருங்கிணைந்த படிப்பு பயிலும் 5 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.1.25 இலட்சமும் என 285 மாணவர்களுக்கு ரூ.67.39 லட்சம் ஊக்கத்தொகை இன்று அமைச்சர் பெருமக்களால் வழங்கப்பட உள்ளது எனத்தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியின் மேடையில் பேசிய அமைச்சர். மா.சுப்ரமணியன், ’கடந்த ஆண்டைக் கணக்கில் எடுத்து கொள்ள முடியாவிட்டாலும் மாநகராட்சி கல்வித்துறை இன்னும் சிறப்பாக செயல்பட்டு தேர்ச்சி விகிதத்தை 90 விழுக்காடாக உயர்த்திக்காட்ட வேண்டும்’ என அலுவலர்களுக்கு மேடையிலேயே அறிவுரை வழங்கினார்.

குறிப்பாக அவர், 'மாநகராட்சி கல்வித்துறை என்பது சிறந்த துறையாக உள்ளது. மாநகராட்சிப் பள்ளியில் 1996ஆண்டு சேர்க்கை 50% இருந்தது. அதற்குப்பிறகு 76% அதிகரித்தது. மேலும் 2006ஆம் ஆண்டு 90% அதிகரித்தது, இது அனைத்தும் தற்போதைய முதலமைச்சரால் தான் சாத்தியமானது.

வார்டு உறுப்பினர் மேம்பாட்டு நிதி 3 லட்சம் என தற்போதைய முதலமைச்சர் மேயராக இருந்தபோது தொடங்கி வைத்தார். அதிலிருந்து மாநகராட்சிப் பள்ளிகளில் கணினி அமைப்பதற்காக நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து அதன் பிறகு மாநகராட்சிப்பள்ளிகளில் கணினி வாங்கப்பட்டது.

சிறப்பாக இருந்த தேர்ச்சி விகிதம் தற்போது 6% விழுக்காட்டிற்கு குறைந்துள்ளது. கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதை போல் சென்னை மாநகராட்சி பள்ளிகளின் பொது தேர்வு தேர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது.

கடந்த ஆண்டைக் கணக்கில் எடுத்து கொள்ள முடியாவிட்டாலும் மாநகராட்சி கல்வித்துறை இன்னும் சிறப்பாக செயல்பட்டு தேர்ச்சி விகிதத்தை 90 விழுக்காடாக உயர்த்திக்காட்ட வேண்டும். மாணவர்களின் கல்விக்கான கட்டமைப்பை அலுவலர்கள் மேம்படுத்த வேண்டும். அதற்கு நிதி அளிக்க அரசு தயாராக உள்ளது’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பரந்தூர் புதிய விமான நிலையம் குறித்த கருத்து கேட்புக்கூட்டத்திற்கு தாமதமாக வந்த அமைச்சர்கள்.. மக்கள் ஆவேசம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.