ETV Bharat / state

IndiGo Airlines: சொந்த ஊருக்கு திரும்பும் போது ஏற்பட்ட சோகம் - நடுவானில் பயணி உயிரிழப்பு!

ஓமனில் இருந்து சென்னைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் மூலம் சென்னை வந்த பயணி ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

indigo airlines
இண்டிகோ ஏர்லைன்ஸ்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2023, 3:27 PM IST

சென்னை: ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 168 பயணிகளுடன் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் கீழே இறங்கத் தொடங்கினர்.

அப்போது அந்த விமானத்தில் பயணித்து வந்த சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த பயணி தனசேகர் (38) மட்டும் கீழே இறங்காமல் விமான இருக்கையிலேயே தலையை சாய்த்து தூங்குவது போல் அமர்ந்திருந்தார்.

இதையடுத்து விமான பணிப்பெண் தனசேகரிடம் சென்னை வந்துவிட்டது. விமானத்தை விட்டு கீழே இறங்குங்கள் என்று கூறினர். ஆனால் தனசேகரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து சக பணிப்பெண்கள் வந்து பார்த்துவிட்டுப் பயணி தனசேகர் மயக்க நிலையில் இருப்பதாக விமானத்தின் தலைமை விமானிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தலைமை விமானி சென்னை சர்வதேச விமான நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்தார்.

சென்னை விமான நிலைய மருத்துவக் குழுவினர் விமானத்திற்குள் வந்து பயணி தனசேகரை பரிசோதித்தனர். அப்போது அவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து திடீரென ஏற்பட்ட கடுமையான மாரடைப்பால் பயணி தனசேகர் உயிரிழந்ததாக அறிவித்தனர்.

உடனடியாக சென்னை விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, உயிரிழந்த பயணியின் உடலை விமானத்தில் இருந்து கீழே இறக்கி மருத்துவப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனசேகர் ஓமன் நாட்டில் வேலை பார்த்து வந்தவர். இப்போது விடுமுறையில் சொந்த ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தபோது விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்த போதே ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்து விட்டதாக தெரிய வருகிறது.

விமானத்தில் தங்களோடு வந்த சக பயணி ஒருவர் விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்தபோதே திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சென்னை விமான நிலைய பயணிகள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:தேயிலைக்கு உரிய விலை வேண்டி 10 வது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.