ETV Bharat / state

சசிகலாவை போல ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டும் எண்ணம் அதிமுகவுக்கு இல்லை - ஜெயக்குமார் திட்டவட்டம் - O Panneerselvam

சசிகலாவை போல ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டும் எண்ணம் அதிமுகவுக்கு இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சசிகலாவை போல ஓபிஎஸ்சை ஓரங்கட்டும் எண்ணம் கட்சிக்கு இல்லை - ஜெயக்குமார் திட்டவட்டம்

author img

By

Published : Jun 20, 2022, 2:55 PM IST

சென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் 5 கோடி ரூபாய் நில அபகரிப்பு வழக்குத் தொடர்பாக இன்று (ஜூன் 20) முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜராகி கையெழுத்திட்டார்.

இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 'ஒற்றைத் தலைமை விவகாரத்தைப் பொறுத்தவரை கட்சியில் உள்ள தொண்டர்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் என அனைவரது மத்தியிலும் தற்போதைய சூழலில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற எண்ணம் தான் உள்ளது. இது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதன் காரணமாகவே அதனை நான் வெளியே தெரிவித்தேன்.

கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது தொண்டர்களுக்கு தெரிய வேண்டும் என மட்டுமே தான் அதை வெளியே கூறினேன். மாறாக அதில் எந்தவொரு உள் நோக்கமும் இல்லை. அதேபோல் ஒற்றைத் தலைமை வேண்டும் என மட்டுமே தான் கூறினேன். அந்த ஒற்றைத்தலைமையில், யார் அந்த ஒற்றைத்தலைமை என்பதைப்பற்றி நான் கூறவில்லை.

ஓ.பன்னீர்செல்வத்தை சசிகலாவைப்போல் ஓரம் கட்டும் எண்ணம் எதுவும் கட்சிக்கு இல்லை. சசிகலாவிற்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர். தற்போதைய சூழலில் ஒற்றைத்தலைமை குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. விரைவில் சுமூகமான தீர்வு எட்டப்படும்.

நான் சிறையில் இருந்து வெளியே வந்த பின் இருவரும் (ஓபிஎஸ், ஈபிஎஸ்) தன் வீட்டிற்கு வந்தனர். அதேபோல இன்றும் தன் வீட்டிற்கு இருவரும் வந்தால் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும். அதுமட்டுமல்லாமல், மாநிலங்களவை உறுப்பினர் சீட் வழங்காத காரணத்தினால் தான் பேசுவதாக கூறும் கருத்துகள் பொய்யானது. பதவிக்காக தான் ஒருபோதும் ஆசைப்பட்டதில்லை'' எனத் தெரிவித்தார்.

சசிகலாவை போல ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டும் எண்ணம் கட்சிக்கு இல்லை - ஜெயக்குமார் திட்டவட்டம்

வருகிற ஜூன் 23 அன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், ஒற்றைத்தலைமை குறித்த பிரச்னை விவாதப்பொருளாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.