தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளியில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு படிப்புகளான பி.ஏ எல்.எல்.பி, பி.பி.ஏ,எல். எல்.பி, பி.காம், எல்.எல்.பி ,பிசிஏ எல்.எல்.பி ஆகிய ஆனர்ஸ் சட்டப் படிப்புகளுக்கு மாநிலம் முழுவதும் இருந்தும் 3 ஆயிரத்து 397 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 2 ஆயிரத்து 747 மாணவர்களின் விண்ணப்பங்கள் தகுதியானவையாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் தேர்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் இன்று கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்த கலாந்தாய்வில் முதல் 8 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் ஆணைகளை வழங்கினார்.