ETV Bharat / state

ஐடி துறையில் பணிபுரிவோர் எண்ணிக்கை அதிகரிப்பு - பேரவையில் தெரிவித்த அமைச்சர் - corona period

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு ஐடி துறையில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகவும், அதில் பெண்கள் 35 சதவீதம் பேர் பணிபுரிவதாக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலுரையில் தெரிவித்துள்ளார்.

ஐடி துறையில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலுரையில் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Apr 1, 2023, 7:06 PM IST

சென்னை: சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை பதிலுரையில் பேசிய தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மும்பை போன்ற நகரங்களின் வளர்ச்சி நகரத்திறகு மட்டுமே இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சி மக்களை அதிகாரப்படுத்தி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் ஐடி துறையில் 7 லட்சத்து 80 ஆயிரம் பேர் பணிபுரிந்து வந்த நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு தற்போது 10 லட்சத்து 20 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருவாதாகவும், இதில் 35 சதவீதம் பெண்கள் பணிபுரிவதாகவும் அமைச்சர் கூறினார். பெண்கள் பாதுகாப்பாக பணிபுரியும் நகரங்களில் தமிழ்நாட்டில் சென்னை முதல் இடத்திலும், கோயம்புத்தூர் இரண்டாம் இடத்தில் இருப்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கோயம்புத்தூர் போன்ற மூன்று நகரங்களில் ஹைடெக் சிட்டி கொண்டு வருவத்ற்கான பெரிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார் என்றார். இந்தியாவில் ஐடி துறையில் ஆராய்ச்சிகளுக்கு பெரிய அளவில் முக்கியதுவம் கொடுக்கப்படவில்லை என கூறிய அமைச்சர், ,தமிழ்நாட்டில் ஆராய்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 30 ஆயிரம் சதுர அடியில் உலக தரம் வாய்ந்த உயர் தொழில்நுட்ப ஆய்வக வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து ஐடி நிறுவங்களில் வேலை செய்து வந்த நிலையில், அரசு ஊழியர்களும் அதேபோன்று பணிபுரியும் வகையில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 184 கோப்புகள் மாவட்டங்களில் உள்ள அலுவலங்களிலும், தலைமைச்செயலகத்தில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 264 கோப்புகள் என பல துறைகள் சேர்ந்து மொத்தமாக 10 லட்சத்து 19 ஆயிரத்து 619 கோப்புகள் E Office திட்டம் மூலமாக மின்னணு கோப்புகளாக மாற்றப்பட்டு அரசு பணியாளர்கள் பணிகளை மேற்கொண்டுள்ளனர் என்றார்.

இதே போல அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஆன்லைன் மூலமாக பணியாற்றும் வகையில் பயிற்சி அளிக்கப் படவுள்ளதாவும், கிராமங்களுக்கும் நகரத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை போக்கும் வகையில் ஒருங்கிணைந்த டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மக்களுக்கு இடையூறு இல்லாமல் அதிவேக இணைய இணைப்பு கிடைக்கும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

பாசிச சக்திகள் நாசிச கனவுகளை திராவிட மாடல் அரசு இருக்கும் வரை அதை கொண்டுவரவும் முடியாது; காலுன்றவும் விடமாட்டோம் என்று தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலுரையில் காட்டமாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுக கட்சி அலுவலக பொருட்களுக்கு உரிமை கோரிய வழக்கு தள்ளுபடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.