ETV Bharat / state

சென்னையில் 25 ஆயிரத்தைக் கடந்த கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை!

author img

By

Published : Apr 19, 2021, 7:46 PM IST

சென்னை: சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருபவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

corona increase
சென்னையில் கரோனா சிகிச்சைபெற்று வருபவர்களில் எண்ணிக்கை 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது

சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தளர்வுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் குறிப்பாக, அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு போன்ற மண்டலங்களில் கரோனா பாதிப்பு தற்போது சற்று அதிகரித்தே காணப்படுகின்றன. கரோனா தொற்றுப் பரவும் பகுதியில், தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு அந்தந்தப் பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்களை நடத்துவது, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டுவருகின்றன.

இதுவரையிலும் 2 லட்சத்து 83 ஆயிரத்து 436 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 2 லட்சத்து 54 ஆயிரத்து 025 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 25 ஆயிரத்து 011 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும் தொற்றால் பாதிக்கப்பட்ட 4,400 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், மண்டல வாரியாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

தேனாம்பேட்டை - 2789
அண்ணா நகர் - 2676
கோடம்பாக்கம் - 2146
திரு.வி.க. நகர் - 2284
ராயபுரம் - 2203
அடையாறு - 1675
தண்டையார்பேட்டை - 1754
அம்பத்தூர் - 1698
வளசரவாக்கம் - 1282
ஆலந்தூர் - 1161
பெருங்குடி - 1424
திருவொற்றியூர் - 630
மாதவரம் - 1009
சோழிங்கநல்லூர் - 714
மணலி - 2

இதையும் படிங்க: அடுத்த 3 மணி நேரத்தில் மழை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.