ETV Bharat / state

சென்னை ஐஐடியில் மேலும் ஒருவருக்கு கரோனா - பாதிப்பு எண்ணிக்கை 198ஆக உயர்வு - ஐஐடி கரோனா பாதிப்பு

சென்னை ஐஐடியில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 198ஆக அதிகரித்துள்ளது.

ஐஐடியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வு

author img

By

Published : May 1, 2022, 4:03 PM IST

சென்னை ஐஐடியில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். விடுதியில் தங்கிப் படிக்கும் ஒரு மாணவர், கடந்த ஏப். 19ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, 20ஆம் தேதி இரண்டு மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டது. இதனால், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

தொடர்ந்து ஏப்.21ஆம் தேதியன்று ஒன்பது மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, ஐஐடியில் உள்ள அனைத்து மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்ந்து செய்யப்பட்ட பரிசோதனை முடிவில் ஏப்.22ஆம் தேதி 21 பேர், 23ஆம் தேதி 22 பேர், 24ஆம் தேதி 5 பேர், 25ஆம் தேதி 20 பேர், 26ஆம் தேதி 32 பேர், 27ஆம் தேதி 33 பேர், 28ஆம் தேதி 26 பேர், 29ஆம் தேதி 11 பேர், 30ஆம் தேதி 14 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

ஐஐடியில் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கும் நிலையில் இன்று (மே 1) ஒருவருக்கு மட்டும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், ஐஐடியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 198ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்ததால் அனைவரும் ஐஐடி வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

சென்னை ஐஐடியில் 7ஆயிரத்து 490 பேர்களில் இதுவரை 7 ஆயிரத்து 313 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 301 பேருக்கு பரிசோதனை செய்யப்பட வேண்டியுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து சென்னை மாநகராட்சி மருத்துவத்துறை அதிகாரி கூறும்போது, “சென்னை ஐஐடியில் 7ஆயிரத்து 313 பேருக்கு நேற்றுவரை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையில் இன்று ஒருவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. இதன்மூலம் மொத்தம் 198 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொடர்ந்து, விடுபட்ட சிலருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஐஐடியில் கண்டறியப்படும் தொற்று, கரோனா ஒமைக்ரான் பிஏ2 தொற்று’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'கரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது' ராதாகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.