ETV Bharat / state

தேவேந்திரகுல வேளாளர் குறித்து வெளிவந்துள்ள செய்திகள் தவறானவை! - Devendrakula Velalar Issue

சென்னை: பட்டியல் பிரிவிலிருந்து தேவேந்திரகுல வேளாளர் இனத்தை நீக்குவது தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் முழுவதும் தவறானவை என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தேவேந்திரகுல வேளாளர்  தேவேந்திரகுல வேளாளர் விவகாரம்  தேவேந்திரகுல வேளாளர் குறித்து வெளிவந்துள்ள செய்திகள் தவறானவை  Devendrakula Velalar  Devendrakula Velalar Issue  The News about Devendrakula Vellalar are false
Devendrakula Velalar Issue
author img

By

Published : Feb 15, 2021, 6:17 PM IST

இது குறித்து மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பட்டியல் பிரிவிலிருந்து தேவேந்திரகுல வேளாளர் இனத்தை நீக்குவது தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் முழுவதும் தவறானவை.

வெளியான செய்திகள் தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. உண்மை நிலையை பிரதிபலிக்கவில்லை. ஏழு பட்டியல் பிரிவு இனங்களை தேவேந்திரகுல வேளாளர்களாக வகைப்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ்நாட்டின் பட்டியல் இனங்களில் ஒன்றாக இது இருக்கும். எனவே, பட்டியல் பிரிவிலிருந்து அவர்கள் நீக்கப்பட்டு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக மாற்றப்படுவார்கள் என்பது முழுவதும் தவறானது. தமிழ்நாட்டின் பட்டியல் பிரிவில் தேவேந்திரகுல வேளாளர்களாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் 7 பிரிவுகளை சேர்ப்பதற்கான மசோதா மக்களவையில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தேவேந்திர குல வேளாளர் அரசாணை - சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் வாக்கு விழுக்காட்டில் கை கொடுக்குமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.