ETV Bharat / state

வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நாமக்கல் ஆட்சியர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் - ஜேடர் பாளையத்தில் உள்ள நெடுஞ்சாலைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து பலர் வீடு

நெடுஞ்சாலைத்துறை நிலத்தில் ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.

வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நாமக்கல் ஆட்சியர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

author img

By

Published : Aug 16, 2022, 10:15 PM IST

நாமக்கல் ஜேடர்பாளையத்தில் உள்ள நெடுஞ்சாலைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து பலர் வீடு மற்றும் கடைகளை கட்டியுள்ளனர். கிராம மக்களால் சாலையைப் பயன்படுத்த முடியவில்லை என்பதால், அந்த கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2008ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என 2010ஆம் ஆண்டு உத்தரவிட்டது. ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் ராஜேந்திரன் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் சந்திரசேகரன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டும் ஆஜராகாததால் ஆட்சியர் மற்றும் பொறியாளருக்கு எதிராக ஜாமீனில் விடுதலை செய்யக்கூடிய வாரண்டை பிறப்பித்து, அதை அமல்படுத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், நெடுஞ்சாலைத்துறை மண்டலப்பொறியாளர் சந்திரசேகரன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

பின்னர், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதாகக்கூறி புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க:எரிசக்தித் துறை சார்பில் ரூ.258 கோடி மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைத்த முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.