ETV Bharat / state

ரயிலில் தவறவிட்ட பணத்தை பத்திரமாக ஒப்படைத்த ரயில்வே போலீசார்

ரயிலில் தவறவிட்ட 23 ஆயிரம் பணத்தை பத்திரமாக மீட்டு உரியவரிடம் எழும்பூர் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.

Money secured  chennai Money secured  the missed money handed over by Railway police  Railway police  money handed over by Railway police  missed money handed over by Railway police  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்  தவரவிட்ட பணத்தை பத்திரமாக ஒப்படைத்த ரயில்வே பாதுகாப்புப் படை  ரயில்வே பாதுகாப்புப் படை  தவரவிட்ட பணத்தை ஒப்படைத்த ரயில்வே பாதுகாப்புப் படை  சென்னையில் தவரவிட்ட பணத்தை ஒப்படைத்த ரயில்வே பாதுகாப்புப் படை
ரயில்வே பாதுகாப்புப் படை
author img

By

Published : Aug 19, 2021, 11:04 PM IST

சென்னை: வேளச்சேரியைச் சேர்ந்த வரதராஜ் இன்று (ஆக 19) அதிகாலை தூத்துக்குடி எக்ஸ்பிரஸில் வந்துள்ளார். அப்போது தாம்பரத்தில் இறங்கிய அவர் தனது பையுடன், 23 ஆயிரம் ரூபாய் பணத்தை ரயிலில் தவறவிட்டுள்ளார்.

இது குறித்து தாம்பரம் ரயில்வே காவல் துறையினரிடம் வரதராஜ் புகார் தெரிவித்தார். இத்தகவலை எழும்பூர் ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறையினரிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பத்திரமாக ஒப்படைப்பு

இதையடுத்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில், எழும்பூர் ரயில்வே பாதுகாப்புப் படையினர் சோதனை செய்தனர்.

அப்போது வரதராஜனின் பை மீட்கப்பட்டது. பின்னர் வரதராஜனை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வரவழைத்து, உரிய விசாரணை நடத்தி தவறவிட்ட 23 ஆயிரம் பணத்துடன் பையை ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: கரோனாவால் வருமானத்தை இழந்த குடும்ப மாணவர்களுக்கு கல்வி அளிக்கத் தயாராக இருக்கும் தனியார் பள்ளி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.