சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாநிலத்தில் தண்ணீர் பிரச்னை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அமைச்சர் விதியை மீறி தண்ணீர் பஞ்சம் இல்லை என்று கூறுகிறார். இதற்காகவே இந்த அரசைக் கலைக்கலாம். தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க முடியாத அரசாக தமிழ்நாடு அரசு இருக்கிறது. இதற்கு ஏரி, குளங்களை தூர்வாராததுதான் முக்கியக் காரணம்.
அதுமட்டுமின்றி அதிமுகவின் லாப நோக்கில் ஏரி, குளங்கள் எதுவும் தூர்வாரப்படாமல் இருக்கிறது. மேலும் அண்டை மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்களைச் சந்தித்து, இரண்டு டிஎம்சி தண்ணீர் கேட்டால் கூட, குடிநீர் பிரச்னை தீர்ந்துவிடும். அதேபோல் முதலமைச்சர் முன்வைக்கும் கோரிக்கை அனைத்தும், பிரதமர் அலுவலகத்தில் உள்ள அலமாரியில் மட்டும்தான் உள்ளது. தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றார்.