ETV Bharat / state

கலவை மருத்துவத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர மருத்துவர் சங்கம் முடிவு - combination medicine

ஆயுர்வேத மருத்துவர்களும் அலோபதி சிகிச்சையை மேற்கொள்ளலாம் என்பதற்கு எதிராக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

The Medical Association opposed combined medicine
ஒரே நாடு ஒரே மருத்துவம் என்ற திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும்- மருத்துவர்கள் சங்கம்
author img

By

Published : Dec 11, 2020, 5:10 PM IST

சென்னை: ஆயுர்வேத மருத்துவர்களும் அலோபதி சிகிச்சையை மேற்கொள்ளலாம் என்பதற்கு எதிராக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பாணையில், ஆயுர்வேத மருத்துவர்கள் 60க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்ய அனுமதி அளித்திருந்தது. இதற்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் ராஜா செய்தியாளர்களை இன்று சந்தித்துப் பேசினார். அப்போது, "ஆயுர்வேத மருத்துவம் படித்த மாணவர்கள் 60க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. முறையான பயிற்சி இல்லாமல் ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் அது ஆபத்தை விளைவிக்கும்.

ஒரு முறையிலிருந்து இன்னொரு முறையில் பயின்றவர்கள் கலவை மருத்துவத்தை செய்யக்கூடாது. தற்போது உள்ள சூழலே தொடர வேண்டும். மத்திய அரசின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நடைபெறும் அடையாள வேலைநிறுத்தமாக காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கரோனா தொற்று காலத்தில் நோயாளிகள் பாதிக்காதவாறு போராட்டத்தை நடத்தி வருகிறோம்.

வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாது, அவசர சிகிச்சைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் 28ஆம் தேதி நடைபெறும் மத்திய செயற்குழுவில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். மேலும், ஒரே நாடு ஒரே மருத்துவம் என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதனை மத்திய அரசு கைவிட வேண்டும்.

மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டால் ஒவ்வொரு மருத்துவத்தின் தனித்துவமும் சிதைக்கப்படும். இது குறித்து வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்த மருத்துவத்தில் சிகிச்சை பெற வேண்டும் என்பது மக்களின் உரிமையாகும். ஆனால், அரசு ஒருங்கிணைந்த மருத்துவத்தை ஏற்படுத்த கூடாது.

முறையான ஆய்வுகள் இல்லாமல் ஒருங்கிணைந்த மருத்துவத்தை மேற்கொள்வது மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். ஒருங்கிணைந்த மருத்துவம் தவறானது. அந்தந்த மருத்துவத்தில் சிகிச்சை மேற்கொள்வதே சரியானதாக இருக்கும்" என்றார்.

இதையும் படிங்க: கன்னியாகுமரியில் மருத்துவர்கள் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.