ETV Bharat / state

ரிப்பன் மாளிகையை மாணவனாக வேடிக்கை பார்த்தவன் இன்று விளக்குகளை ஒளிர வைத்துள்ளேன் - முதலமைச்சர் பூரிப்பு!

பெருநகர சென்னை மாநகராட்சியின் அலுவலகமான ரிப்பன் மாளிகையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ், ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் நிறம் மாறும் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட ரிப்பன் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார்.

ஒளிரூட்டப்பட்ட ரிப்பன் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தற்போது பொது மக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார்

author img

By

Published : Jun 2, 2022, 11:05 PM IST

சென்னை: 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான ரிப்பன் மாளிகையானது பெருநகர சென்னை மாநகராட்சியின் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. ரிப்பன் மாளிகை அவ்வப்போது வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுவது வழக்கம்‌. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். இந்நிலையில் தற்போது நிரந்தரமாக நிறம் மாறும் வண்ண விளக்குகளால் ரிப்பன் மாளிகை ஒளிரூட்டப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சிங்காரச்சென்னை 2.0 திட்டத்தின்கீழ், சென்னை மாநகராட்சியில் சீர்படுத்தும் வகையில் சுவர் ஓவியங்கள் வரைவது, மாநகராட்சி குப்பை இல்லாத மாநகராட்சி ஆக மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த ஓராண்டாக சென்னை மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்ட சாதனைகள் குறித்த சாதனை விளக்கப் புத்தகத்தையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் துரைமுருகன், கே.என். நேரு மற்றும் சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர், மேயர், துணை மேயர் மற்றும் சென்னை மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ‘இந்த ரிப்பன் கட்டடம் காலையில் வெள்ளை மாளிகையாக, மாலையில் வண்ண விளக்குகளால் ஒளிரும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கட்டடம் என்பது வரலாற்று கட்டடம்.‌ நான் மாணவனாக இருக்கும்போது சென்னையின் சில இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது, இதனை நானும் வேடிக்கை பார்த்தவன். இன்று இந்த கட்டடத்தின் விளக்கு எரிய முன்னிற்கிறேன்‌.

இதுபோன்ற பாரம்பரிய கட்டடங்களை நான் பள்ளியில் படித்தபோது சுற்றிப்பார்க்க அழைத்துச்செல்வார்கள். மிருகக்காட்சி சாலை, காந்தி மண்டபம், ரிப்பன் மாளிகை ஆகியவற்றை சுற்றிப்பார்த்திருக்கிறேன். வேடிக்கை பார்த்தவன் இன்று விளக்குகளை ஒளிர வைத்துள்ளேன். 1996ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றபோது, எனக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என பல அமைச்சர்கள் கலைஞரிடம் வலியுறுத்தினர்.

ஒளிரூட்டப்பட்ட ரிப்பன் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொது மக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார்.

அதன்பிறகு நீண்டநாள் நடைபெறாமல் இருந்த தேர்தல் நடத்தப்பட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயராக நான் பொறுப்பேற்றேன். எல்லோரும் முதலமைச்சர் ஸ்டாலினை அமைச்சராக்கி ஓர் அறையில் அமர்த்த நினைத்தீர்கள்.

நானோ அவரை மேயராக்கி இந்த மாளிகையில்(ரிப்பன்) அமர வைத்துள்ளேன் என கலைஞர் கூறியதை நினைவு கூறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். ஒவ்வொரு முறை ரிப்பன் மாளிகை வழி செல்லும்போதும் இது என் நினைவுக்கு வரும். இந்த ஏற்பாட்டை செய்த மாநகராட்சி மேயருக்கும், ஆணையருக்கும் நன்றி’ எனப் பேசினார்.

இதையும் படிங்க: 'கலைஞர் எழுதுகோல் விருது' பெறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.