ETV Bharat / state

வயலில் இயந்திரங்களை இறக்கியது வரலாற்றிலேயே நடக்காத கொடுமை - வைகோ குற்றச்சாட்டு

சென்னை : நாற்று நட்ட வயலில் இயந்திரங்களை இறக்கியது தமிழ்நாட்டு வரலாற்றிலேயே நடக்காத கொடுமை என வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

வைகோ பேட்டி
author img

By

Published : May 20, 2019, 7:35 PM IST

சென்னை சிறப்பு நீதிமன்ற வாயிலில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, 'தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஆகியவற்றில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். மத்தியில் காங்கிரஸ், மாநிலக் கட்சிகளின் கூட்டணியில் அரசு அமையும். தமிழ்நாட்டில் மேலும் பல ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்திருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. இதற்குத் தமிழக அரசு முழுக்க முழுக்க உடந்தை. காவிரி மண்டல மக்கள் ஒட்டுமொத்தமாக இந்த திட்டத்தை எதிர்க்கிறார்கள்.

அவ்வாறு இருக்கும் பட்சத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் வேதாந்தா நிறுவனம் குழாய்களை பதிப்பதற்காக, நாகை மாவட்டத்தில் விவசாயிகளின் நாற்று நட்ட வயல்களில் இயந்திரங்களைக் கொண்டு இறக்கியது தமிழ்நாட்டு வரலாற்றிலேயே நடக்காத கொடுமை' என்று அவர் தெரிவித்தார்.

சிறப்பு நீதிமன்ற வாயிலில் செய்தியாளர்களிடம் தலைவர் வைகோ

தமிழகத்தில் நாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தலில் 
திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

மத்தியில் காங்கிரஸ், மாநிலக் கட்சிகளின் கூட்டணி அரசு அமையும்.

தமிழ்நாட்டில் மேலும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட 
வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்திருப்பது மிகுந்த கவலை அளிக்கின்றது.
நாற்று நட்ட வயலில் இயந்திரங்களைக் கொண்டு இறக்கியது தமிழ்நாட்டு வரலாற்றிலேயே நடக்காத கொடுமை.

இதற்குத் தமிழக அரசு முழுக்க முழுக்க உடந்தை. காவிரி மண்டலத்து மக்கள் ஒட்டுமொத்தமாக எதிர்க்கின்றார்கள்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.