ETV Bharat / state

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு: வழக்கறிஞரைக் கொல்ல முயற்சி

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வழக்கறிஞரை வெட்டிக் கொல்ல முயற்சி செய்த சம்பவத்தில் காவல் துறையினர் மூன்று பேரை கைதுசெய்தனர்.

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு : வழக்கறிஞரைக் கொல்ல முயற்சி

author img

By

Published : Jan 11, 2022, 6:22 PM IST

சென்னை: ஆவடி அடுத்த திருநின்றவூர், நடுகுத்தகை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் (40). இவர், திருவள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில்,செந்திலுக்கும், நடுகுத்தகை, பெருமாள் கோயில் தெருவைச் சார்ந்த மதன் (35) என்பவரது மனைவி கனிமொழி (30) என்பவருக்கும் திருமண பந்தத்தைத் தாண்டிய உறவு இருந்துவந்துள்ளது.

கொடுக்கல் வாங்கலில் தகராறு

மேலும், செந்தில், கனிமொழிக்கு வீடு கட்டுவதற்கு கொஞ்சம், கொஞ்சமாக ஐந்து லட்சம் ரூபாய்வரை பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. சமீபத்தில், செந்தில் கொடுத்த பணத்தை மதன், கனிமொழியிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் கொடுக்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில், நேற்று இரவு செந்தில், மதன் வீட்டுக்குச் சென்று உள்ளார். அப்போது, அவர் கொடுத்த பணத்தை மதனிடம் திரும்பக் கேட்டுள்ளார். இதனால் செந்தில், மதன் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த மதன், அவரது நண்பர்கள் அதே பகுதியைச் சார்ந்த ஆரோன் என்ற அருண்பாபு (26), விக்னேஷ் (என்ற) ரியாஸ் (20) ஆகியோர் சேர்ந்து செந்திலைக் கத்தியால் சரமாரியாக வெட்டி உள்ளனர்.

கொல்ல முயன்ற மூவர் கைது

இதில், அவருக்கு தலை, முகம், வயிறு உள்ளிட்ட இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதனைப் பார்த்த, மூவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர், தகவல் அறிந்த உறவினர்கள் விரைந்துவந்து செந்திலை மீட்டு திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கொண்டுசேர்த்தனர்.

பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் செந்திலுக்குத் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர். புகாரின் அடிப்படையில், திருநின்றவூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும்,காவல் துறையினர் செந்திலை கொல்ல முயன்ற மதன், ஆரோன், ரியாஸ் ஆகிய மூவரையும் இன்று கைதுசெய்தனர். பின்னர், காவலர்கள் அவர்களை திருவள்ளூர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:Husband killed her wife: விருதுநகரில் கணவன் கத்தியால் குத்தியதில் மனைவி உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.