ETV Bharat / state

பல்கலைக் கழங்களில் மீண்டும் பழைய பாடத்திட்டம்..கல்லூரி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழு தகவல்!

தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் மாணவர்களின் நலனைக் கருதி தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் வடிவமைத்துள்ள மாதிரி பாடத்திட்டத்தை பல்கலைக் கழகம் ஏற்கலாம் அல்லது மறுக்கலாம் என கல்லூரி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.

Joint Action Committee
கல்லூரி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழு
author img

By

Published : Jul 12, 2023, 7:55 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்கள் அனைத்திலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு உயர் கல்வி மன்றத்தின் சார்பில் பாடத்திட்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாதிரி பாடத்திட்டம் உயர் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்தப் பாடத்திட்டத்தை பல்கலைக்கழகங்கள் பின்பற்றி மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. மேலும், பாடத்திட்டத்தில் 25 சதவீதம் அவர்கள் பகுதிக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜூன் 31ஆம் தேதி உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் தயார் செய்துள்ள பாடத்திட்டத்தினை அனைத்து பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் 75 சதவீதம் நடத்த வேண்டும் என்றும், அப்போதுதான் அந்தப் படிப்புகள் பிற பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் படிப்பிற்கு இணையானது என சான்றிதழ் உயர் கல்வித்துறையால் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பாடத்திட்டம் தரமானதாக இல்லை எனக் கூறி பல்வேறுத் தரப்பிலும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் கல்லூரி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழு வலியுறுத்தியது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் துணைத்தலைவர் ராமசாமி , உறுப்பினர் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

இது குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள தகவலில், 'கல்லூரி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் கருத்துகளை தெளிவாக எடுத்து வைத்தோம். தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் எல்லா பல்கலைக் கழகங்களுக்கும் மாதிரி பாடத்திட்டம் மட்டுமே அனுப்பி உள்ளோம். அதை பல்கலைக் கழகம் ஏற்றுக் கொள்ளலாம் அல்லது மறுக்கலாம். எந்த முடிவும் அந்தப் பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டக்குழு (Board of Studies) முடிவு எடுத்துக் கொள்ளலாம் என தெளிவாக கூறியுள்ளது. மேலும், அதன் அடிப்படையில் பல்கலைக் கழகங்களுக்கு தகவல் அனுப்பப்படும்’ எனவும் தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் துணைத்தலைவர் உறுதி அளித்துள்ளார்.

'எனவே பழைய பாடத்திட்டத்தையே தொடர பல்கலைக் கழகங்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என தெளிவுபடுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மாநிலப் பல்கலைக் கழகங்கள் அந்தந்த பாடத்திட்டக்குழு சுதந்திரமாக முடிவெடுக்க ஆவண செய்ய வேண்டும்' என அதில் கூறியுள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவர் ராமசாமி கூறும்போது, 'தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு மாதிரிப் பாடத்திட்டம் வடிவமைத்து அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பாடத்திட்டத்தில் பல்கலைக்கழகங்கள் மாற்றம் செய்து கொள்ளலாம். ஆனால், 75 சதவீதம் பாடத்தை நடத்த வேண்டும். பிறப் பல்கலைக் கழகங்கள் நடத்தும் பாடத்திட்டத்திற்கு இணையாக இல்லாவிட்டால் பட்டப்படிப்பிற்கு இணையானது என்ற சான்றிதழ் வழங்க அரசு அனுமதி அளிக்காது. 25 சதவீதம் பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு மாற்றிக் கற்றுக் கொடுக்கலாம்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:Coimbatore: வணிக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து - நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.