சென்னை: ஆவடி அருகே கொள்ளுமேடு பகுதியில் வீட்டின் உரிமையாளர் ஒருவரின் அலமாரி மேல் வைத்திருந்த சில பொருட்களை எடுக்க முற்பட்டுள்ளார். அப்போது அலமாரி மீது இருந்து ஆறு அடி நீளம் உள்ள நாகப்பாம்பு ஒன்று படம் எடுத்துள்ளது.
இதனைக் கண்ட வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்து உடனடியாக ஆவடி பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடி வல்லுநரான ராஜேஷ் என்பவருக்குத் தகவல் கொடுத்துள்ளார். வீட்டிற்கு வந்த ராஜேஷ் அலமாரியின் அருகே ஏறி பதுங்கி இருந்த நாகப்பாம்பை லாவகமாக பிடித்து பையில் பத்திரமாக அடைத்து, திருவள்ளூர் அருகே அடர் வனப்பகுதியில் விட்டார்.
வீட்டின் பின்புறம் அதிகளவில் மரம், செடி கொடிகள் உள்ளதால் வீட்டின் மேற்கூரை ஓடு வழியே நுழைந்து வீட்டிற்குள் நாகப்பாம்பு வந்தது தெரிய வந்தது.