இதுகுறித்து, சமூக சமத்துவத்திற்கான மருத்துவ சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கூறுகையில், “நீட் நுழைவுத் தேர்வில் தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வது மிக மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. எனவே அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி சட்டப் பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததால் சட்டமாக மாற்றப்படவில்லை. எனவே அதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் எழுந்தது. தமிழ்நாடு ஆளுநர் ஏழை, எளிய மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அத்தகைய சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
எனவே இதனை இந்தாண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்காக உடனடியாக மருத்துவ கலந்தாய்வு நடத்த வேண்டும். அதில் கால தாமதம் செய்யக்கூடாது. அதேபோன்று சட்டரீதியான போராட்டத்திற்கும் அரசு தயாராக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள் இதனை எதிர்த்து வழக்குத் தொடர்வதற்கு வாய்ப்பு உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு அரசு சட்ட போராட்டத்திற்குத் தயாராக வேண்டும். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் 300 க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’7.5% இடஒதுக்கீடு அரசாணைக்கு சட்டப்பாதுகாப்பு வேண்டும்’: பாமக ராமதாஸ்