ETV Bharat / state

காவலர் குடியிருப்பில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை! - chennai news

சென்னையில் காவலர் குடியிருப்பில் பெண் காவலரின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவலர் குடியிருப்பில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

author img

By

Published : Aug 11, 2022, 11:16 AM IST

சென்னையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வரும் பெண் காவலர், போக்குவரத்து புலனாய்வு பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பெண் காவலர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனது 15 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். மேலும் இவரது மகள் தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று பெண் காவலர் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்ட நிலையில், அவரது மகள் வயிற்று வலி காரணமாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனிடையே நேற்று மாலை பெண் காவலர் தனது மகளை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யபட்டிருந்தது.

இதனால் சந்தேகமடைந்த காவலர், உடனே தனது சகோதரருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்குச் சென்று பார்த்த சகோதரர், வீடு உள்பக்கமாக தாழ்பாள் போடப்பட்டிருந்தது. இதனால் பதற்றமடைந்த சகோதரர், கதவை உடைத்து உள்ளே சென்று பாரத்தபோது சிறுமி ஹாலில் தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தற்கொலை கைவிடுக
தற்கொலை கைவிடுக

உடனடியாக அவரை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அங்கு சென்ற காவல்துறையினர், சிறுமியின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், கடந்த சில தினங்களாக சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததால் சிகிச்சை பெற்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் நேற்று மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டதால் வலி தாங்காமல் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

இருப்பினும் சிறுமியின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி் வருகின்றனர்.

இதையும் படிங்க: வேளாண் பல்கலை., விடுதியில் முதலாமாண்டு மாணவர் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.