ETV Bharat / state

சென்னையில் மீண்டும் திருச்சி ராம்ஜி நகர் கொள்ளை கும்பல் கைவரிசை - திருச்சி ராம்ஜி நகர் கும்பல்

சென்னையில் கார் கண்ணாடிகளை நூதன முறையில் உடைத்து, லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடும் திருச்சி ராம்ஜி நகர் கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 15, 2023, 9:00 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த பாதிக்கப்பட்டவர்

சென்னையில் பூக்கடை, பாண்டி பஜார், தியாகராய நகர், தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்துக்கும் மேற்பட்ட கார்களின் கண்ணாடிகளை உடைத்து உள்ளிருந்த லேப்டாப், பணம் உள்ளிட்ட பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் கடந்த டிசம்பர் மாதம் திருடிச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் அந்தந்த மாவட்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து புலன் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் நடந்த இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு மேற்கொண்டு குற்றவாளிகள் எங்கெங்கு பயணித்துள்ளனர் என்பதை தீவிர விசாரணைக்குப்பின் கண்டறிந்து அவர்கள் பெங்களூருவில் பதுங்கியிருப்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து தேனாம்பேட்டை தனிப்படை காவல் துறையினர் பெங்களூரு சென்று சபரி என்ற முக்கிய கொள்ளையனை சுற்றி வளைத்து பிடித்தனர். குறிப்பாக விமானம் மூலம் டெல்லி தப்பிச் செல்லும் முன் சபரியை காவல் துறையினர் கைது செய்து சென்னை அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 3 லேப்டாப் மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சபரியை சென்னை அழைத்துச் சென்று தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த கும்பல் மீண்டும் சென்னையில் களம் இறங்கி கார் கண்ணாடிகளை உடைத்து லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது.

கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே போன்று திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த எட்டு பேர் கொண்ட கும்பல் சென்னை அண்ணா நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கார் கண்ணாடிகளை நூதன முறையில் உடைத்து லேப் டாப்புகளை திருடியுள்ளனர். இவர்களை அண்ணாநகர் தனிப்படை காவல் துறையினர், பெங்களூருவில் வைத்து கைது செய்தனர். அதே பாணியில் இந்த கும்பல் மீண்டும் கொள்ளையை அரங்கேற்றி இருப்பது தெரியவந்துள்ளது.

அதே பழைய பாணியில் கார் கண்ணாடிகளை பெரிய ஆயுதமின்றி நூதன முறையில் உடைத்து திருடுகின்றனர். பெண்கள் பயன்படுத்தும் ஒரு ஸ்லைடு பின், சில ரப்பர் பேண்ட், சாக்லேட் கவர் மற்றும் இரும்பு குண்டு என கையடக்க பொருட்களை வைத்து கவன் போல செய்து கார் கண்ணாடியை நொடிப்பொழுதில் உடைத்து லாவகமாக திருடிவிட்டு சென்றுள்ளனர்.

சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் திருச்சி ராம்ஜி நகரிலிருந்து 5 பேர் கொண்ட கும்பல் வந்து கொள்ளை சம்பவங்களை நிகழ்த்தி சென்றதாக கைதான சபரி வாக்குமூலம் அளித்துள்ளார். மீதமுள்ள கொள்ளையர்கள் தீபக், மதன், பிரதீப், விவேக் ஆகிய நான்கு பேரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கொள்ளையடித்த நபர்களுக்கு பதிலாக திருச்சி ராம்ஜி நகரில் இருக்கும் வேறு ஒரு ஆட்களை சரணடைய வைத்து வழக்கில் தப்பித்துக் கொள்ளும் முறையையும் திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர்கள் கையாளுகின்றனர்.

அவ்வாறு சிறைக்கு செல்லும் நபர்கள் "கொன்னையன்கள்" என்று அழைக்கப்படுவார்கள். எனவே இந்த வழக்கிலும் அது போன்று நிகழாமல் இருக்க சிசிடிவி காட்சிகளை தெளிவாக வைத்து கொள்ளை சம்பவத்தை நிகழ்த்திய கொள்ளையர்களை மட்டும் கைது செய்ய காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் லாரியுடன் சிக்கிய கொள்ளையன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.