ETV Bharat / state

மைசூர் செல்ல வேண்டிய விமானம் சென்னையில் தரையிரங்கியது ஏன்?

பெல்காமிலிருந்து மைசூர் செல்ல வேண்டிய தனியார் பயணிகள் விமானம் திடீரென சென்னையில் தரையிரங்கியது.

The flight bound for Mysore landed in Chennai for mechanical malfunction

author img

By

Published : Nov 17, 2020, 10:19 AM IST

சென்னை: பெல்காமிலிருந்து மைசூருக்கு ட்ரூஜெட் ஏர்லைன்ஸ் என்ற தனியார் பயணிகள் விமானம் 47 பயணிகள்,5 விமான ஊழியர்கள் என மொத்தம் 52 பேருடன் நேற்று நள்ளிரவு புறப்பட்டது. மைசூரில் மோசமான வானிலை காரணமாக, அங்கு விமானம் தரையிறங்க முடியவில்லை. எனவே விமானம் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

அதன்படி சென்னை விமான நிலையம் வந்து தரையிறங்க தயாரான போது, விமானத்தில் திடீா் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானிலே வட்டமடித்தது. இதன்காரணமாக, சென்னை விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் துரிதமாக செய்யப்பட்டன. பின்பு விமானம் சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது.

ஆனால் ஓடுபாதையிலேயே நின்று விட்டது. பின்பு பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து அவசரமாக கீழே இறக்கப்பட்டு, சென்னை விமானநிலைய ஓய்வு அறைகளில் தங்கவைக்கப்பட்டனா். விமானம் பழுதடைந்து ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டதால் அதன் பிறகு வந்த விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், இரண்டாவது ஓடுபாதையை பயன்படுத்தி விமான சேவைகள் நடந்தன. பின்பு பழுதடைந்த விமானம், இழுவை வண்டிகள் மூலம் விமான நிறுத்தத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பயணிகள் அனைவரும் இன்று காலை பெங்களூரு விமானத்தில் கர்நாடக மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு 52 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினா். இந்த சம்பவம் குறித்து டிஜிசிஏ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: மாடுகளின் இனப்பெருங்கத்திற்காக ஜெர்மனியில் இருந்து விமானத்தில் காளைகள் வரவழைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.