ETV Bharat / state

'இது எங்கள் மண்; இதை ஒரு காலத்திலும் விட்டுக்கொடுக்கமாட்டோம்' - போராட்டத்தை வாபஸ்பெற்ற மீனவர்கள்

நொச்சிக்குப்பம் மீனவ மக்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் வரை உள்ள 7 மீனவ கிராமங்களை மீன் பிடி பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Etv Bharat நீதிமன்ற உத்தரவை எதிர்த்த சாலையில் போராட்டம் நடத்திய மீனவர்கள் வாபஸ்

author img

By

Published : Apr 19, 2023, 4:13 PM IST

நீதிமன்ற உத்தரவை எதிர்த்த சாலையில் போராட்டம் நடத்திய மீனவர்கள் வாபஸ்

சென்னை: நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள சாலையில் மீன் கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு வாரமாக சாலையில் மரக்கட்டைகள், படகுகள், மீன்கள், ஐஸ் பெட்டிகள் உள்ளிட்டவற்றை வைத்து போராடி வந்த மீனவர்கள் நேற்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடத்திய பேச்சு வார்த்தையின் பேரில் இன்று காலை சாலையின் ஒரு ஓரமாக போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் மீன்கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 19ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தனர். இதனால், காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட்டதால் போராட்டத்தை தற்காலிகமாக மீனவர்கள் கைவிட்டனர்.

மேலும், சாலையில் இருந்த படகுகளை வெளியேற்றியும், சாலையில் இருந்த பந்தல்களை கழற்றியும் போக்குவரத்திற்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் பழைய நிலைமைக்கு சாலையைக் கொண்டு வந்தனர். போராட்டம் கைவிடப்பட்டது தொடர்பாக நொச்சிக்குப்ப மீனவர் கிராம சபையைச் சார்ந்தவர்கள் செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது அவர்கள் கூறியதாவது, "நொச்சிக்குப்பத்தில் இருந்து பட்டினம்பாக்கம் வரை உள்ள ஏழு மீனவ கிராம மக்களும் தொடர்ந்து ஒரு வாரமாக மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அமைப்புகளும் எங்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஆதரித்து பேசி இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம்.

சுதந்திரமாக எங்கள் உரிமைகளை மீட்டெடுக்கப் போராடுவோம், இந்த இடத்தில் எங்கள் பகுதி மீனவர்கள் நிரந்தரமாக மீன்பிடித் தொழில் செய்து மீன் விற்பனை செய்ய வேண்டும், அதற்காக அரசு ஒத்துழைக்க வேண்டும். நொச்சிக்குப்பம் முதல் பட்டினம்பாக்கம் வரை உள்ள ஏழு மீனவ கிராமங்களை மீன் பிடி பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

இது எங்களுடைய மண், இதை ஒரு காலத்திலும் நாங்கள் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம். தற்போதைய சூழலில் இந்தப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம். மேலும் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன் அங்காடிக்கு நாங்கள் செல்லமாட்டோம்" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: Chennai Building Collapse: சென்னையில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விபத்து.. நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.