ETV Bharat / bharat

வயநாடு மட்டுமல்ல.. 10 மாநிலங்களில் இன்று சட்டமன்ற இடைத்தேர்தல்... விறுவிறுக்கும் வாக்கு பதிவு..! - BY POLL

இந்தியாவில் இன்று ஒரு நாடாளுமன்ற தொகுதி மற்றும் 31 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து வருகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (credit - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 13, 2024, 10:24 AM IST

புதுடெல்லி: இந்தியாவில் 10 மாநிலங்களில் உள்ள 31 சட்டமன்ற தொகுதிகளுக்கும், கேரளாவின் வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று (நவ.13) இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வயநாட்டில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறார்.

வயநாட்டுடன், ராஜஸ்தானில் 7 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 6 தொகுதிகளுக்கும், அசாமில் 5 தொகுதிகளுக்கும், பீகாரில் 4 தொகுதிகளுக்கும், கர்நாடகாவில் 3 தொகுதிகளுக்கும், மத்தியப் பிரதேசத்தில் 2 தொகுதிகளுக்கும், சத்தீஸ்கர், குஜராத், கேரளா மற்றும் மேகாலயாவில் தலா ஒரு தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. வரும் நவம்பர் 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வயநாட்டில் ராகுல் காந்தியின் தங்கை பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இவருக்குப் போட்டியாக மாநிலத்தை ஆளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சத்யன் மொகேரி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் ஆகியோர் களம் காண்கின்றனர். தொகுதியை தக்க வைத்துக்கொள்வது மட்டுமின்றி, பிரியங்கா காந்தி தனது சகோதரர் ராகுல் காந்தி பெற்ற வாக்குகளை விட அதிகம் பெறுவாரா என்ற அழுத்தமும் அவர் மேல் இருந்து வருகிறது.

இதையும் படிங்க: வயநாடு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது; மக்கள் யார் பக்கம்?

அசாமில் தோலாய், பெஹாலி, சமகுரி, போங்கைகான் மற்றும் சிட்லி ஆகிய ஐந்து இடங்களுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. பீகாரில் ராம்கர், தராரி, இமாம்கஞ்ச் மற்றும் பெலகஞ்ச் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதுபோல, கர்நாடகாவில் சன்னபட்னா,ஷிகாவ்ன் மற்றும் சந்தூர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் புத்னி மற்றும் விஜய்பூர் சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ராஜஸ்தானில் ஜுன்ஜுனு, தௌசா, தியோலி-உனியாரா, கின்வ்சார், சௌராசி, சலூம்பர் மற்றும் ராம்கர் ஆகிய இடங்களில் இன்று சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. சலூம்பர் மற்றும் ராம்கர் தொகுதியில் அம்ரித்லால் மீனா (பாஜக) மற்றும் ஜுபைர் கான் (காங்கிரஸ்) ஆகிய இரு எம்எல்ஏக்களின் மறைவு காரணமாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் தல்தாங்ரா, சீதை (தனி தொகுதி), நைஹாத்தி, ஹரோவா, மேதினிபூர் மற்றும் மதரிஹாட் ஆகிய ஆறு தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், மதரிஹாட் (பாஜக) தொகுதி தவிர மற்ற 5 தொகுதிகள் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) 2021 வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.