ETV Bharat / state

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

பள்ளி மாணவர்களுக்கு எதிராக அதிகரிக்கும் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

TN school education dept
பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் - கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 13, 2024, 9:54 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திட அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு, பள்ளிகளில் மாணவர் மனசு புகார் பெட்டி, மாணவ மாணவியர்களிடம் ஒழுங்கீனமாக நடப்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை என அரசு மேற்கொண்டு வரும் முனைப்பான நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் மதுமதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து அரசு செயலாளர் மதுமதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சார்ந்து பள்ளி நிர்வாகி மற்றும் பள்ளி முதல்வர் மீது காவல்துறையால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட 2 பள்ளிகளுக்கு அரசால் சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டு, பள்ளி நிர்வாகம் சிறப்பு அதிகாரிகளின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் காரணமாக பள்ளி நிர்வாகி, முதல்வர் மற்றும் சார்ந்த ஆசிரியர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எதிரான செயல்பாடுகளை தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு பாடப்புத்தகத்தின் பின்பக்க அட்டையில் 14417, 1098 போன்ற கட்டணயில்லா தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டு, பாலியல் துன்புறுத்தல் சார்ந்த விவரங்களை புகார் அளிக்க மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; தனியார் பள்ளி ஆசிரியருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை!

  • ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு SSAC (Student safeguarding advisory committee) குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் மாதம் ஒருமுறை இக்குழு கூடி மாணவிகளுக்கெதிரான புகார் ஏதும் பெறப்படின் அதுசார்ந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • மேலும், ஒவ்வொரு பள்ளியிலும் "மாணவர் மனசு" என்ற புகார்ப் பெட்டி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள SSAC குழு உறுப்பினர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வாயிலாக பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவியர்களை NSS, NCC, Scout & Guide, JRC போன்ற அமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் காரணமாக பள்ளியை விட்டு வெளியே மாவட்ட அளவிலோ அல்லது மாநில அளவிலோ அழைத்துச் செல்ல நேரிடும்பொழுது ஒவ்வொரு மாணவ, மாணவியரின் பெற்றோரிடமும் தனித்தனியாக எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்று அதன் பிறகு மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
  • மாவட்டக் கல்வி அலுவலரின் முன் அனுமதியின்றி மாணவ, மாணவியரை பள்ளியைவிட்டு வெளியே அழைத்துச் செல்லக்கூடாது.
  • மாணவ, மாணவியரை வெளியே அழைத்துச் செல்லும் பொழுது 10 மாணவர்களுக்கு ஒரு ஆண் ஆசிரியர் எனவும், 10 மாணவிகளுக்கு ஒரு பெண் ஆசிரியை எனவும் உடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர்கள், ஆசிரியைகள் உடன் செல்ல வேண்டும்.

இதையும் படிங்க: உடற்கல்வி ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ! பள்ளி முதல்வரும் கைதானது ஏன்?

  • ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டக்கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறையைச் சார்ந்த இயக்குநர்கள் அல்லது இணை இயக்குநர்கள் மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு செல்லும் பொழுது மேற்கண்ட பணிகளை கண்காணித்து தொடர் நடவடிக்கைகள் எடுக்க அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிக் குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவியர்களிடம் ஒழுக்கக்கேடான முறையில் நடந்து கொள்பவர்கள் மீது காவல்துறை வாயிலாக குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன், துறைரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.