இதுதொடர்பாக அவர், “கோவிட்-19 வைரஸ் தொற்றைப் பரவாமல் தடுப்பதற்கு உலகளவில் பல்வேறு நாடுகள் மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திலும் தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணிகள் கடந்த மூன்று வாரமாக நடைபெற்றன.
முன்பெல்லாம் நோய்த் தொற்றை ஏற்படுத்தும் கிருமிகளை ஆய்வகங்களில் ஆராய்ச்சி செய்து, அதன் வாயிலாகவே தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வந்தன. தற்போது அந்த நிலை மாறி, நோய்க் கிருமியின் மரபணு மாதிரியை மட்டும் வைத்துக் கொண்டு செயற்கை முறையில் கம்ப்யூட்டர் மென்பொருள் மூலம் முதல்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் தொழில்நுட்பம் வந்துவிட்டது. இதற்கு எதிர்மறை தடுப்பு மருந்தியல் (ரிவர்ஸ் வேக்சினாலஜி) என்று பெயா்.
பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பியல் துறை சாா்பில் அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. எனது தலைமையில் துறைத் தலைவா் டாக்டா் புஷ்கலா, ஆராய்ச்சி மாணவர் தம்மண்ணா பஜந்த்ரி ஆகியோர் அடங்கிய குழுவினா் தடுப்பு மருந்தைக் கண்டறியும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு மருந்து - இங்கிலாந்து நாளை முதல் மனிதர்கள் மீது சோதனை!