ETV Bharat / state

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் நிறைவு!

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் இன்று 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில் திமுக, காங்கிரஸ், அதிமுக, சுயேச்சைகள் உள்ளிட்ட 13 பேர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் இன்றுடன் நிறைவு

author img

By

Published : May 31, 2022, 4:55 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 24ஆம் தேதி தொடங்கி இன்று பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது.

இதில் திமுக சார்பாக தஞ்சாவூர் சு.கல்யாணசுந்தரம், இரா.கிரிராஜன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோரும், காங்கிரஸ் சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரமும் வேட்பு மனுவினைத் தாக்கல் செய்துள்ளனர்.

இதேபோல அதிமுக சார்பாக சி.வி.சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோரும், சுயேச்சைகள் 7 பேரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில், இதுவரை திமுக சார்பில் 3 பேரும், அதிமுக சார்பில் 2 பேரும், காங்கிரஸ் சார்பில் ஒருவரும், சுயேச்சைகள் 7 பேரும் என மொத்தம் 13 பேர் தங்களுடைய வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை தொடங்குகிறது. வேட்புமனுக்களை திரும்பப்பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் 3ஆம் தேதி ஆகும்.

மாநிலங்களவை இடங்களுக்கு போட்டியிடுபவர்களுக்கு வேட்புமனுவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 10 பேர் முன் மொழிந்து இருக்க வேண்டும். அவ்வாறு உறுப்பினர்கள் முன்மொழியாமல் தாக்கல் செய்த சுயேச்சைகளின் வேட்புமனுக்கள் பரிசிலீனையன்று நிராகரிக்கப்படும். சுயேச்சைகளுக்கு 10 எம்எல்ஏக்களின் முன்மொழிவு கிடைப்பதற்கான வாய்ப்பு கிடைப்பது குறைவு.

இதனால் திமுக, காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

இதையும் படிங்க: ஆளும் கட்சியினர் மிரட்டும் தொனியில் பேசி எங்களை பேசவிடுவதில்லை - அதிமுக உறுப்பினர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.