சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி உதய குமார் (28). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று (ஜுன்.09) உதய குமார் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து அருள்நகர் பகுதியில் உள்ள காலி இடத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
இதுகுறித்து பீர்கன்காரனை காவல்துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு காவலர்கள் விரைந்தனர். ஆனால் காவலர்கள் வருவதைக் கண்ட உதயகுமார் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினார்.
மேலும் ஒரு சிலரை விரட்டி சென்ற காவல் துறையினர் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த வர்க்கீஸ் (20), பிரவீன்குமார் (19), அஜித் (22) ஆகியோரை கைது செய்தனர். பிறகு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து தப்பி ஓடிய உதய குமாரைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: தாம்பரம் அருகே அடுத்தடுத்த மருந்தகங்களின் பூட்டை உடைத்து கொள்ளை