சென்னையில் கடந்த 7ஆம் தேதி காவல்துறை அலுவலர் ராமசாமிக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் 50 விழுக்காடு பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், ஆக்சிஸன் அதிகளவில் தேவைப்பட்டது.
பின்னர், ரத்த பரிசோதனையில் நோயின் தீவிரமும் கடுமையாக இருந்ததால், தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 20 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் கரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீட்டிற்கு திரும்பி உள்ளார். அதைத் தொடரந்து காவல்துறை அலுவலரின் அனுபவத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாளையங்கோட்டை மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கரோனா தொற்று