ETV Bharat / state

தமிழக அரசு ஒரு ரூபாய்க்கு செய்யும் செலவு என்ன? வரவு என்ன? - பட்ஜெட் தாக்கல்

தமிழ்நாடு அரசு ஒரு ரூபாய்க்கு செய்யும் செலவு என்ன? வரவு என்ன? என்பது குறித்து இந்த செய்தியில் காணலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 20, 2023, 5:57 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 20) நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதி நிலையைத் தாக்கல் செய்தார். தமிழ்நாட்டின் மொத்த வரவினங்கள் 2 லட்சத்து 73 ஆயிரத்து 246 ரூபாய் கோடி, மொத்த செலவினங்கள் 3 லட்சத்து 65 ஆயிரத்து 321 கோடி ரூபாயாக உள்ளது.

மேலும் மாநிலத்தின் 2023-24ஆம் ஆண்டுக்கான வரி வரவினங்கள் 2 லட்சத்து 70 ஆயிரத்து 515 கோடி ரூபாயாக மதிப்பீடு செய்துள்ளது. இது கடந்த 2022-23ஆம் ஆண்டை விட 10.1 விழுக்காடு அதிகமாகும். அரசின் சொந்த வரிகள் வாயிலாக பெறப்படும் வருவாய் 19.3 விழுக்காடு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 182 கோடி, மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வரி வருவாய் 20 ஆயிரத்து 223 கோடி ரூபாய், ஒன்றிய அரசிடமிருந்து பெரும் உதவி மானியங்கள் 27 ஆயிரத்து 445 கோடி ரூபாய், மத்திய வரிகளில் பங்கு 41 ஆயிரத்து 665 கோடி ரூபாய் உள்ளிட்டவை மூலம் தமிழ்நாட்டிற்கு வருவாய் கிடைக்கிறது.

அரசு ஒரு ரூபாய் எவ்வாறு திரட்டுகிறது? பொதுக்கடன் 33 பைசா, கடன்களின் வசூல் ஒரு பைசா, மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 44 பைசா, மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் 5 பைசா, மத்திய வரிகளின் பங்கு பத்து பைசா என தமிழக அரசு ஒரு ரூபாய்க்கு இவ்வாறு திரட்டுகிறது.

அரசு ஒரு ரூபாயில் செலவு செய்யப்படும் செலவு என்ன? கடன் வழங்குதல் மூன்று பைசா, கடன்களைத் திருப்பி செலுத்துதல் 11 பைசா, மூலதனச்செலவு 11 பைசா, வட்டி செலுத்துதல் 13 பைசா, உதவித்தொகைகளும் மானியங்களும் 30 பைசா, சம்பளங்கள் 19 பைசா, ஓய்வூதியம் மற்றும் ஓய்வு காலப் பலன்கள் 9 பைசா, செயல்பாடுகளும் பராமரிப்புகளும் நான்கு பைசா என ஒரு ரூபாய்க்கு தமிழக அரசு செலவு செய்து வருகிறது என நிதித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ''அரசு ஊழியர்களுக்கான செலவு அதிகரிப்பு'' - பிடிஆர் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.