ETV Bharat / state

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை மாலை கரையைக் கடக்கக்கூடும் - வானிலை ஆய்வு மையம் - தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை மாலை கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சற்றுமுன் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மையம்
author img

By

Published : Nov 10, 2021, 8:45 PM IST

சென்னை: தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை (நவ.11) மாலை கரையைக் கடக்கக்கூடும் என தென்மண்டல சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் பாலச்சந்தர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
"தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தமிழ்நாடு கடற்கரைப் பகுதியை நாளை காலை 11 மணி அளவில் நெருங்கும். அதனைத்தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா, வட தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரையின் காரைக்காலுக்கும் - ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் கடலூருக்கு அருகில் நாளை மாலை கடக்கக்கூடும். இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் 11ஆம் தேதி காலை முதல் வீசக்கூடும் .

மழைப் பொழிவு

அதி கனமழை 5 இடங்களிலும்; மிக கனமழை 21 இடங்களிலும்; கனமழை 40 இடங்களிலும் பதிவாகியுள்ளது. மேலும் இன்று (நவ.10) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யும்.

டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கோயம்புத்தூர், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை(நவ.11) மழை நிலவரம்

திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் பெய்யக் கூடும்.

செங்கல்பட்டு, புதுச்சேரி, கோயம்புத்தூர், நீலகிரி, நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை நிலவரம்

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சில பகுதிகளில் அதி கன மழையும் பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்கக் கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி மற்றும் தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்.

சென்னையில் 61% மழைப் பதிவு

அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து தமிழ்நாட்டில் 38 விழுக்காடு மழைப் பதிவாகி உள்ளது. ஆனால், வழக்கமாக 25 விழுக்காடு கிடைத்திருக்க வேண்டும். 55 % அதிகமாக கிடைத்துள்ளது.

சென்னையில் 61 விழுக்காடு மழைப் பதிவாகி உள்ளது. ஆனால், 41 விழுக்காடு கிடைத்திருக்க வேண்டும். வழக்கத்தை விட 50% அதிகமாக கிடைத்துள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நடிகர் சூர்யா மக்களின் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.