ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில், அடிப்படை கணினி பயன்பாடு, தொழில்நுட்ப திறன்வளர் பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது.
இந்த திறன் வளர்ச்சியின் மூலம் பள்ளிகளில் இருக்கும் உயர் தரமிக்க ஆய்வகங்களைப் பயன்படுத்துதல், கல்வி மேலாண்மைத் தகவல் மையம் (EMIS - Educational Management Information System) மூலம் இணையதளத்தில் மாணவர்கள் குறித்த தரவுகளைப் பதிவேற்றம் செய்வது உள்ளிட்டப் பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 'ஆகஸ்ட் மாதம் முழுவதும் 2.10 லட்சம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. கரோனா தொற்றால் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் மாறியுள்ள சூழலில், இத்தகைய பயிற்சி மிகத் தேவையானது.
இதன்மூலம் ஆசிரியர்கள் EMIS தளத்தை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.