ETV Bharat / state

புதுச்சேரி, ஶ்ரீ ஹரிகோட்டா இடையே புயல் கரையைக் கடக்க வாய்ப்பு - எப்போது தெரியுமா? - வானிலை செய்திகள்

புயல் வருகிற 9ஆம் தேதி பின் இரவும், 10ஆம் தேதி அதிகாலை நேரத்தில் கரையை கடக்க வாய்ப்பு இருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

’எம்.டி அவசர சிகிச்சை பட்ட மேற் படிப்பு தொடங்க நடவடிக்கை..!’ - அமைச்சர் ம.சு

author img

By

Published : Dec 7, 2022, 4:19 PM IST

சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நேற்று தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று(டிச.7) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இன்று காலை 11 நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில் சென்னையில் இருந்து தென்கிழக்கில் 770 கிலோமீட்டர் தொலைவிலும் காரைக்காலில் இருந்து 690 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து இன்று மாலை புயலாக வலுப்பெற கூடும் என்று கூறிய அவர், ' 8, 9, 10 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும்.

நாளை தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழ்நாடு மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

தொடர்ந்து, 9ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும்,

புதுச்சேரி, ஶ்ரீ ஹரிகோட்டா இடையே புயல் கரையைக் கடக்க வாய்ப்பு!

சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

10ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தற்போதைய நிலவரப்படி புதுச்சேரி, ஶ்ரீஹரிகோட்டா இடையில் புயலாக கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. புயலானது 9ஆம் தேதி பின் இரவும் 10ஆம் தேதி அதிகாலை நேரத்திலும் கரையைக் கடக்க வாய்ப்பு இருக்கிறது" எனக் கூறினார்.

இதையும் படிங்க: உயிரை சூறையாடும் சென்னை சாலைகள்.. சீரமைக்கப்படுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.