சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக 22ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கன மழை முதல் லேசனா மழை வரையும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று (நவ.18) வெளியிட்ட செய்திக் குறிப்பில், "வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த ‘மிதிலி’ புயலானது, வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, நேற்று (நவ.17) பிற்பகல் 3.30 அளவில் வங்கதேசம் கடற்கரை அருகில் கேப்புபாராவில் கரையைக் கடந்தது.
- — Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 18, 2023
">— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 18, 2023
இதைத் தொடர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகத் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பல இடங்களிலும் வரும் நாட்களில் லேசான மழை முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது."
மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்: இன்று (நவ-18) வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் பல இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி ஆகிய 11 மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (நவ.19): தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பு.
20ஆம் தேதி: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பு.
21 மற்றும் 22ஆம் தேதிகளில், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது புதுச்சேரியில் மிக லேசான மழைப் பதிவாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக, மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு மற்றும் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதிகளில் தலா 7 செ.மீ மழைப் பதிவாகி உள்ளன, சென்னை மற்றும் அதன் புறநகர் பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்..! வெற்றி வாய்ப்பு யாருக்கு..! முழு அலசல்!