ETV Bharat / state

நொச்சிக்குப்பத்தில் அதிநவீன மீன் விற்பனையகம் - மாதிரி படம் வெளியீடு!

author img

By

Published : Jul 9, 2022, 6:13 PM IST

சென்னை பட்டினபாக்கம் ,நொச்சிக்குப்பம் பகுதியில் மீன் விற்பனை செய்வதற்கான நிரந்தர விற்பனையகம் நவீன முறையில் அமைக்கப்பட்டு வருகிறது இதனின் மாதிரி புகைப்படத்தை மாநகராட்சி வெளியிட்டது.

நொச்சிக்குப்பத்தில் அதிநவீன மீன் விற்பனையகம் - மாதிரி படம் வெளியீடு!
நொச்சிக்குப்பத்தில் அதிநவீன மீன் விற்பனையகம் - மாதிரி படம் வெளியீடு!

சென்னை: பட்டினப்பாக்கம் ,நொச்சிக்குப்பம் வரையிலான சாலை ஓரத்தில் இருபுறம் இருக்கும் மீன் இறைச்சி கடைகளை அப்புறப்படுத்தி ஒரே இடத்தில் மீன் விற்பனை செய்வதற்காக மாநகராட்சி சார்பில் பணிகள் தொடங்க இருக்கின்றன. முதலாக கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் லூப் சாலை வரை சுமார் 2.25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மீன் இறைச்சி கடைகளை அகற்றி சாலை மேம்படுத்தப்பட உள்ளது.

சாலையில் இருக்கும் மீன் கடைகளை பொதுமக்கள் ஆக்கிரமித்து நிரந்தரமாக விற்பனை செய்து வருவதாக மாநகராட்சியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை மூலம் சாலை ஓரத்தில் இருக்கும் மீன் கடைகளை அகற்றி அதற்குப் பதிலாக புதிதாக அமைக்கப்பட இருக்கின்ற நவீன மீன் மார்க்கெட் மாதிரி புகைப்படத்தை மாநகராட்சி வெளியிட்டது.

நொச்சுக்குப்பத்தில் அமைக்கும் நிரந்தர மீன் விற்பனையகத்தின் மாதிரி படத்தை மாநகராட்சி வெளியீடு!

இந்த வகையில் பட்டினப்பாக்கம் அமைந்துள்ள பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் பரப்பளவில் இடத்தை தேர்வு செய்து அதற்கான பணிகள் தொடங்க இருப்பதாக தெரிவித்தனர். சுமார் ஒன்பது கோடி ரூபாய் செலவில் சந்தை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைக்கப்பட இருக்கின்ற மீன் இறைச்சி மார்க்கெட்டில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது.

மேலும் மீன்களை பதப்படுத்தி வைப்பதற்கான இடமும் மீன் கழிவுகளை கொட்டுவதற்கான வசதிகள் செய்து தருவதாக தெரிவித்து மாநகராட்சி நிவாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகள் அனைத்தும் ஓராண்டுக்குள் நிறைவு செய்து முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதையும் படிங்க: கவியருவியில் காட்டாற்று வெள்ளம்; சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.