ETV Bharat / state

தேர்தல் கூட்டம் நடத்த 136 இடங்களை ஒதுக்கிய மாநகராட்சி - தேர்தல் கூட்டம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கூட்டம் நடத்த, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 136 இடங்களை மாநகராட்சி ஒதுக்கியுள்ளது.

தேர்தல் கூட்டம்
சென்னை மாநகராட்சி
author img

By

Published : Feb 10, 2022, 6:33 AM IST

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் 2022ஐ முன்னிட்டு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பாதயாத்திரை, சைக்கிள், வாகன பேரணிக்கு கரோனா காரணமாக வரும் 11ஆம் தேதி வரை அனுமதியில்லை. அதன்படி, கூட்டம் நடைபெறும் இடம் உள்ளரங்கமாக இருப்பின் 50 விழுக்காடு திறன் அடிப்படையிலும் மற்றும் திறந்தவெளி அரங்கமாக இருப்பின் 30 விழுக்காடு திறன் அடிப்படையிலும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரின் அனுமதி பெற்று பரப்புரைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திறந்தவெளி இடங்களில் கூட்டம் நடத்திட ஏதுவாக 136 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இது குறித்த விவரங்கள் மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in/gcc/citizen-details/public_meeting_location/ என்ற இணையதள இணைப்பில் மண்டல வாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சார அனுமதி தொடர்பாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். கூட்டம் நடத்தும் நபர்கள் சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கூட்டம் நடைபெறும் நாள், நேரம் போன்ற விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். ஒரே இடத்தில் ஒரே நாளில் ஒன்றிற்கு மேற்பட்ட நபர்கள் கூட்டம் நடத்த விண்ணப்பித்தால் முதலில் விண்ணப்பித்த நபருக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு காவல் துறையிடமிருந்து தடையின்மை சான்று பெற உதவியாக காவல் உதவி ஆய்வாளர் பணியமர்த்துப்பட்டுள்ளார். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பிரச்சார கூட்டங்களுக்கு மாநகராட்சி அனுமதித்துள்ளது.

வேட்பாளர்கள் அதிகபட்சம் 20 ஆதரவாளர்களுடன் வீடு வீடாக பரப்புரை மேற்கொள்ளலாம். வேட்பாளர்கள் தங்கள் பரப்புரைக்கு அச்சிடப்பட்ட அறிவிப்புகளைப் பயன்படுத்தலாம். சுவரொட்டிகள், கொடிகள், பதாகைகள், சிலைகள் பிரச்சாரத்திற்கு அனுமதிக்கப்படமாட்டாது. மத சார்புடைய சின்னங்கள் பயன்படுத்தியோ, அல்லது சமூகம் மற்றும் சாதி அடிப்படையான உணர்வுகளை பயன்படுத்தியோ வாக்குசேகரிக்க கூடாது.

மத அல்லது மொழி அடிப்படையில் பல்வேறு தரப்பினரிடையே வெறுப்புணர்வு அல்லது இறுக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவோ அல்லது அதிகப்படுத்தும் விதமாகவோ செயல்படுதல் கூடாது என மாநகராட்சி வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கரோனா நடவடிக்கைகள் குறித்த அறிவுறுத்தல்களை மீறும் நபர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் 2005இன் பிரிவு 51 முதல் 60 வரையிலான விதிகளின்படி, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 188 இன் கீழ் மற்றும் பிற சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி உயிரிக் கழிவுகளிலிருந்து எரிபொருள் உற்பத்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.