ETV Bharat / state

ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு பணி நியமன ஆணை: முதலமைச்சர் வழங்கல்! - பென்னிக்ஸ் சகோதரிக்கு அரசு வேலை

சென்னை: சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்குப் பணி நியமன ஆணையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

cm palanisamy
cm palanisamy
author img

By

Published : Jul 27, 2020, 1:40 PM IST

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணையில் தந்தை, மகன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், இன்று(ஜூலை 27) முதலமைச்சர் பழனிசாமி, ஜெயராஜின் மூத்த மகளான பெர்சிக்கு அரசு பணிக்கான ஆணையை வழங்கினார்.

அப்போது, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. சண்முகநாதன், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும், ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு அரசு தரப்பில் 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் முடிவு நிராகரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.