ETV Bharat / state

வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய முதலமைச்சர் - Chennai General Secretariat News

சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து பணிகாலத்தில் காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

cm order issue  The Chief Minister who issued the appointment order to the heirs  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்  Tamil Nadu Civil Supplies Corporation  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  Chief Minister Edappadi Palanisamy  சென்னை தலைமை செயலகச் செய்திகள்  Chennai General Secretariat News
Chief Minister Edappadi Palanisamy order issue
author img

By

Published : Dec 22, 2020, 6:09 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில், 5 வாரிசுதாரர்களுக்கும், 5 உதவி மேலாளர்கள் (தரக் கட்டுப்பாடு) பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(டிச.22) வழங்கினார்.

வாரிசுகளுக்கு பணிநியமன ஆணை:

அதில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 13 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், எடையாளர், காவலர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக தமிழ்நாடு முதலமைச்சர் 5 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை

அதேபோல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலைகளில் காலியாக உள்ள 10 முறைப் பொறியாளர்கள், தரக்கட்டுப்பாட்டுப் பிரிவில் காலியாக உள்ள 7 உதவி மேலாளர்கள் (தரக் கட்டுப்பாடு) பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 பேருக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உடனடி பணி நியமன ஆணை : நெகிழ்ச்சியில் ஆழ்த்திய முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.