சென்னை: தலைமைச் செயலகத்தில், அறநிலையத்துறை சார்பில் ரூ.105 கோடி மதிப்பீட்டில் 18 கோயில்களில் திருமண மண்டபங்கள், திருக்குளப் பணிகள், பக்தர்கள் தங்கும் விடுதி, விருந்து மண்டபம், அர்ச்சகர்கள் பணியாளர்கள் குடியிருப்பு, அன்னதானக் கூடம், முடிகாணிக்கை காதுகுத்தும் மண்டபம், வணிக வளாகம், கோயில் பள்ளி, கல்லூரி கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், கலையரங்கம், புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், மண்டல இணை ஆணையர் அலுவலகம், ஓதுவார் பயிற்சிப் பள்ளி போன்ற 25 புதிய திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக திருக்கோயில்களின் வளர்ச்சிக்காக திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மீட்பு, 250 க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு, பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த திருத்தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, திருக்குளங்களை புனரமைத்தல், திருக்கோயில்களில் திருப்பணிகள் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளையும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மதுரை, மீனாட்சி சுந்ததேஸ்வரர் கோயிலில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டும் பணி, கள்ளழகர் கோயிலில் ரூ.12.90 கோடி மதிப்பீட்டில் விருந்து மண்டபம், காதுகுத்தும் மண்டபம் மற்றும் முடிக்காணிக்கை மண்டபம், வேங்கடசமுத்திரம், காட்டுப் பத்திரகாளியம்மன் கோயிலில் ரூ.3.70 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் போன்ற திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகள்.
சென்னை, வடபழனி ஆண்டவர் கோயிலில் ரூ.9.84 கோடி மதிப்பீட்டில் அன்னதானக் கூடம், முடி காணிக்கை மண்டபம் மற்றும் பல்நோக்கு கட்டடம் கட்டும் பணிகள், ஏகாம்பரரேசுவரர் கோயிலில் ரூ.2.54 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் மற்றும் குடியிருப்புக் கட்டடம், மயிலாப்பூர், கபாலீசுவரர் கோயிலில் ரூ.3.65 கோடி மதிப்பீட்டில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்புக் கட்டடம் போன்ற திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகள்.
கோடம்பாக்கம், பரத்வாஜேஸ்வரர் கோயில் சார்பில் அஞ்சுகம் துவக்கப் பள்ளியில் ரூ.1.72 கோடி மதிப்பீட்டில் புதிதாக உணவருந்தும் கூடம் மற்றும் கலையரங்கம் கட்டும் பணிகள், திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோயில் சார்பில் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் பேயாழ்வார் கோயில் தெருவில் பணியாளர்கள் குடியிருப்பு மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டும் பணிகள், ரூ.3.22 கோடி மதிப்பீட்டில் துளசிங்கபெருமாள் கோயில் தெருவில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகள்.
அய்யாப் பிள்ளை தெரு மற்றும் முத்துகாளத்தி தெரு ஆகிய இடங்களில் ரூ.2.46 கோடி மதிப்பீட்டில் குடியிருப்புக் கட்டடம், காஞ்சிபுரம், திருநீர்மலை, ரெங்கநாதர் பெருமாள் கோயிலில் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்புக் கட்டடம் கட்டும், குன்றத்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம், செங்கல்பட்டு, திருவிடந்தை, நித்தியகல்யாணப் பெருமாள் கோயிலில் ரூ.4.30 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: என் மார்பை பிளந்து பார்த்தால் கலைஞர் தான் இருப்பார்...வைகோ உருக்கம்...