சென்னை காவல் ஆணையர், கூடுதல் காவல் ஆணையர்கள், இணை ஆணையர்கள் உள்ளிட்டோர் ஜூன் 29ஆம் தேதியன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து, சென்னை மாநகர காவல்துறையில் புதிதாக நியமிக்கப்பட்ட காவல் அலுவலர்கள் ஜூலை 1ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டனர். அதன்படி போக்குவரத்து பிரிவின் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்ட கண்ணன், வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் ஏ. அருண், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் பி.சி.தேன்மொழி, தெற்கு மண்டல இணை ஆணயர் ஏ.ஜி.பாபு ஆகியோர் பொறுப்பேற்றனர்.
சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஜூலை 2ஆம் தேதி பதவியேற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட காவல்துறை உயர் அலுவலர்கள் முதலமைச்சர் பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் என். தமிழ்செல்வன், கூடுதல் இயக்குநர் டாக்டர் ஏ.கே. விஸ்வநாதன், சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு - தெற்கு) டாக்டர் ஆர். தினகரன், காவல்துறை கூடுதல் ஆணையர் (போக்குவரத்து) டாக்டர் என். கண்ணன்,
மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் பி.சி. தேன்மொழி, காவல்துறை இணை ஆணையர் ஏ.ஜி. பாபு, பெருநகர காவல்துறை இணை ஆணையர் (போக்குவரத்து - தெற்கு) எஸ். லட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'எத்தனை இழப்புகள் வந்தாலும் சீனாவின் உறவை கைவிட மாட்டோம்' - இம்ரான் கான்