சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக் குழுவினர் நேற்று(டிச.11) சென்னை வந்தது. அதனைத்தொடர்ந்து இன்று(டிச.12) தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுடன் மத்தியக் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த ஆலோசனையில், சென்னை பெருவெள்ளப் பாதிப்புகளைச் சரிசெய்வதற்காக சிறப்பு நியமனம்(பொறுப்பு) செய்யப்பட்ட செயலாளர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், புயலால் பாதிப்படைந்த பகுதிகளில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது எனவும், மின்வாரியத்துறை மற்றும் மாநகராட்சி சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், சுகாதாரத்துறை சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும், தாழ்வானப் பகுதிகளில் நிரந்தரமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பதையும் மத்தியக் குழுவினர் கேட்டறிந்தனர்.
-
ஒன்றியக் குழுவினருடன் விளக்கக் கூட்டம்#CMMKSTALIN | #TNDIPR | #CM_MKStalin_Secretariat |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan@Chief_Secy_TN pic.twitter.com/DI3Zd6SMev
— TN DIPR (@TNDIPRNEWS) December 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ஒன்றியக் குழுவினருடன் விளக்கக் கூட்டம்#CMMKSTALIN | #TNDIPR | #CM_MKStalin_Secretariat |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan@Chief_Secy_TN pic.twitter.com/DI3Zd6SMev
— TN DIPR (@TNDIPRNEWS) December 12, 2023ஒன்றியக் குழுவினருடன் விளக்கக் கூட்டம்#CMMKSTALIN | #TNDIPR | #CM_MKStalin_Secretariat |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan@Chief_Secy_TN pic.twitter.com/DI3Zd6SMev
— TN DIPR (@TNDIPRNEWS) December 12, 2023
அதைத்தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட சென்னை வேளச்சேரி எ.ஜி.எஸ் காலனி, புளியந்தோப்பு, சாய் பாலாஜி நகர், அம்பேத்கர் கல்லூரி பின்புறம் உள்ள கனேசபுரம், மோதிலால் நகர் உள்ளிட்ட தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில், ரங்கநாத் ஆடம், திமான் சிங் ஆகியோர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
-
"மிக்ஜாம்" புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மதிப்பீடு செய்வதற்காக வந்த ஒன்றிய குழு இன்று(12.12.2023) பெருங்குடி மண்டலம் பள்ளிக்கரணை சதுப்பு நில மற்றும் சாய் பாலாஜி நகர் பகுதிகளில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் திரு. குணால் சத்யார்த்தி அவர்கள் (1/3) pic.twitter.com/xmqRvYbdMq
— Greater Chennai Corporation (@chennaicorp) December 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">"மிக்ஜாம்" புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மதிப்பீடு செய்வதற்காக வந்த ஒன்றிய குழு இன்று(12.12.2023) பெருங்குடி மண்டலம் பள்ளிக்கரணை சதுப்பு நில மற்றும் சாய் பாலாஜி நகர் பகுதிகளில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் திரு. குணால் சத்யார்த்தி அவர்கள் (1/3) pic.twitter.com/xmqRvYbdMq
— Greater Chennai Corporation (@chennaicorp) December 12, 2023"மிக்ஜாம்" புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மதிப்பீடு செய்வதற்காக வந்த ஒன்றிய குழு இன்று(12.12.2023) பெருங்குடி மண்டலம் பள்ளிக்கரணை சதுப்பு நில மற்றும் சாய் பாலாஜி நகர் பகுதிகளில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் திரு. குணால் சத்யார்த்தி அவர்கள் (1/3) pic.twitter.com/xmqRvYbdMq
— Greater Chennai Corporation (@chennaicorp) December 12, 2023
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி, “சென்னையில் மத்திய அரசின் சார்பாக தலைமை தாங்கி, இங்குள்ள அதிகாரிகளுடன் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்வதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்பாக ஆறு பேர் கொண்ட குழுவுடன் இங்கு வந்துள்ளோம்.
இந்திய பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் ஆலோசனைப்படி, சென்னை மற்றும் சுற்றுப்பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு, அது குறித்து அறிந்து கொண்டோம். இந்தப் பாதிப்பு மிக மோசமாகக் காணப்பட்டது.
உடனடியாக செயல்பட்டு மழைநீரை அகற்றி, சிறப்பாகப் பணியாற்றிய தமிழக அரசை பாராட்டுகிறேன். திறன்பட வேலைப் பார்த்ததால் மிகக் குறைவான உயிர் இழப்பே ஏற்பட்டுள்ளது. ஏற்பட்ட உயிரிழப்பிற்காக வருந்துகிறோம். கடந்த 2015 ஆம் ஆண்டை விட, இந்த முறை இங்குள்ள கட்டமைப்புகள் மூலம் சிறப்பாகச் செயல்பட்டு, மின்சார வசதியும் உடனடியாக சரி செய்யப்பட்டுள்ளது.
உடனடியாக, நடவடிக்கை எடுத்த அரசாங்கத்தை பாராட்டுகிறோம். இதுகுறித்து மத்திய அரசிடம் பேசி தமிழக அரசுக்குத் தேவையானது குறித்து எடுத்துக் கூறப்படும். இந்தப்பகுதி தாழ்வானப் பகுதி என்பதால், மழை நீர் வெள்ளம் உடனடியாக வெளியேற வழி இல்லை.
இந்தப் பகுதிகளில் வடிகால் அமைக்கப்பட்டக் கால்வாய்களை மேலும் விரிவுப்படுத்த, சிறந்த ஐஐடி நிபுணர்களைக் கொண்டு பணியைச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த ஆய்வு மூன்று நாட்கள் நடைபெறும். அதன்பின் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், சேதாரம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்படும். மேலும், 6 அமைச்சரகத்திற்கு இது அனுப்பப்பட்டு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இது போன்ற நிகழ்வுகள் சென்னையில் ஏற்படுவதைக் குறித்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்த முறை புயலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும், மழை அதிகமாக பொழிந்ததாலும் அளவுக்கு அதிகமாக வெள்ளம் சூழ்ந்தது. தமிழக அரசுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது. மிக விரைவாகச் செயல்படுத்திய தமிழக அரசின் பணிகள் திருப்தி அளிக்கிறது” என்று கூறினார்.
இதையும் படிங்க: சிறையில் உள்ள மகனை ஜாமீனில் எடுக்க முயன்ற மாமியாரை வெட்டிக் கொன்ற மருமகள் கைது!