போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளார்களிடம் கூறுகையில், “கரோனா வைரஸ் தடுப்பு காரணமாக தமிழ்நாடு முழுவதும் நாளை மாலை 6 மணியிலிருந்து 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருப்பதால் கூட்டம் அதிகமாக உள்ளது.
கூட்டத்தைக் கட்டுப்படுத்த அதிக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை மாநகரப் பேருந்து 100 பேருந்துகளை வெளியூருக்கு அனுப்பி வைக்க உள்ளோம். மேலும் நாளை மாலை 6 மணி வரை மட்டுமே சென்னை மாநகரப் பேருந்து இயங்கும். கூட்ட நெரிசலைத் தவிர்க்க அதிகப்படியான பேருந்துகள் இயக்கப்படும். தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன” என்றார்.
உலக சுகாதகர நிறுவனம் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக பொது இடங்களில் மக்கள் அதிகமாகக் கூடக் கூடாது என்று கடுமையாக வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு அலட்சியமாக போக்குவரத்தைத் தொடங்கி ஏராளமான மக்களை ஒரே இடத்தில் கூடச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரத்திற்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை!