ETV Bharat / state

ஒரே நிமிடத்தில் கோடீஸ்வரர்களான 100 பேர் - ஹெச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

சென்னையில் நேற்று (மே 29) காலை எச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்கள் 100 பேரது வங்கிக் கணக்கிற்கு ரூ. 13 கோடி தவறுதலாக கிரெடிட் செய்யப்பட்ட விவகாரம் குறித்து வாடிக்கையாளர் ஒருவர் விளக்குகிறார்.

author img

By

Published : May 30, 2022, 9:39 PM IST

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வங்கி வாடிக்கையாளர்

சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலை பர்கிட் சாலை சந்திப்பில் (HDFC) ஹெச்டிஎப்சி வங்கியின் கிளை இயங்கி வருகிறது. இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் 100 பேரின் வங்கிக் கணக்குகளில் நேற்று காலை வங்கியில் இருந்து தலா 13 கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் பலர் சம்பந்தப்பட்ட வங்கி அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் உடனடியாக 13 கோடி ரூபாய் பணம் சென்ற வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கை முடக்கி 13 கோடி ரூபாயை வங்கி கணக்கிலிருந்து மீண்டும் பதிவிறக்கம் செய்து இன்று (மே 30) முழுவதுமாக சீர் செய்தனர். சாஃப்ட்வேர் அப்டேட் செய்யும்போது, தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டு, வாடிக்கையாளர்களின் 90 பேரின் வங்கிக் கணக்கிற்கு 13 கோடி ரூபாயும், 10 வாடிக்கையாளருக்கு 5, 10 ஆயிரம் ரூபாயும் சென்றது தெரியவந்தது.

ஆனால், வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கிற்கு வெறும் குறுந்தகவல் மட்டுமே சென்றதாகவும், பணம் செல்வதற்குள் முடக்கி சீர் செய்துவிட்டதாகவும் வங்கித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தனது வங்கிக் கணக்கில் 13 கோடி ரூபாய் வந்தவுடன் அதிர்ச்சியடைந்து தானே முதல் ஆளாக வங்கி அலுவலருக்குத் தகவல் கொடுத்ததாக கோடம்பாக்கத்தைச் சேர்ந்த முகமது அலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, “கடந்த 10 ஆண்டுகளாக HDFC வங்கியில் கணக்கு வைத்துள்ளேன். நேற்று காலை திடீரென எனது வங்கிக் கணக்கில் 13 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாக குறுந்தகவல் வந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தேன். இதை சோதனை செய்ய எனது நண்பருக்கு 2 லட்சம் அனுப்பியபோது நிஜமென்று நம்பினேன்.

உடனடியாக HDFC வங்கி அதிகாரிக்கு தொடர்பு கொண்டு, இது குறித்து சொன்னபோது தவறு நடக்க வாய்ப்பில்லை என்று மறுத்ததால், 13 கோடி ரூபாய் வந்ததற்கான ஆவணத்தை அனுப்பியவுடன் அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரிகள் வங்கி கணக்கை முடக்கினர்.

பின்னர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 13 கோடி ரூபாய் வந்ததாகவும், உடனடியாக சரி செய்யப்படும் எனவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து சில மணி நேரத்தில் 13 கோடி ரூபாய் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டு சீர் செய்யப்பட்டுவிட்டதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்” என்றார்.

இதையும் படிங்க: திடீர் கோடீஸ்வரர்கள் ஆன வாடிக்கையாளர்கள்.. 100 பேருக்கு தலா ரூ.13 கோடி.. தி.நகரில் தனியார் வங்கி தாராளம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.