இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையை பொருத்தவரையில், நிலத்தடி நீர் மிகவும் குறைந்த பகுதியாக அம்பத்தூர் உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 5.72 மீட்டரில் இருந்த தண்ணீர், மே மாத தொடக்கத்தில் 7.72 மீட்டராக கீழே இறங்கியுள்ளது. குறிப்பாக மேலோட்டமாக நிலத்தடி நீர் உள்ள பகுதியாக சோழிங்கநல்லூர் உள்ளது. இங்கு, பிப்ரவரி மாதத்தில் 3.27 மீட்டராக இருந்த தண்ணீரின் அளவு, மே மாதத்தில் 4 மீட்டராக குறைந்துள்ளது.
மேலும், கடந்த பிப்ரவரி மற்றும் மே மாதத்தில் நிலத்தடி நீர் குறைந்தது குறித்த அளவீடுகள் வெளியிடப்பட்டுள்ளன. பெருங்குடி, அடையாறு, ஆலந்தூர், வளசரவாக்கம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, திருவிக நகர் உள்ளிட்ட பிற பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்துள்ளன” என்று தெரிவித்துள்ளது.
சென்னை மாநகரில் நிலத்தடி நீர் குறைந்த பகுதிகள்
பகுதி | பிப்ரவரி | மே | குறைவு வித்தியாசம் |
பெருங்குடி | 4.10 | 5.43 | 1.33 |
அடையாறு | 4.88 | 5.48 | 0.6 |
ஆலந்தூர் | 4.98 | 6.17 | 1.19 |
வளசரவாக்கம் | 6.72 | 6.74 | 0.02 |
கோடம்பாக்கம் | 6.42 | 7.07 | 0.65 |
தேனாம்பேட்டை | 5.43 | 5.63 | 0.2 |
அண்ணாநகர் | 4.79 | 5.81 | 1.02 |
அம்பத்தூர் | 5.98 | 7.72 | 1.74 |
திருவிக நகர் | 5.41 | 7.52 | 2.11 |
ராயபுரம் | 6.70 | 7.07 | 0.37 |
தண்டையார்பேட்டை | 6.11 | 6.26 | 0.15 |
மாதவரம் | 5.56 | 6.52 | 0.96 |
திருவொற்றியூர் | 4.70 | 5.18 | 0.48 |
மணலி | 4.23 | 5.26 | 1.03 |